கோபியரை பரமானந்தத்தில் மூழ்க வைக்கும்,
கணத்திற்கு கணம் ஸ்ரீஹரியை உணர வைக்கும் |
அனைவரையும் மதுரபக்தியில் தோய வைக்கும்,
கிருஷ்ண பாத ஸ்பர்சத்தால் பாவனமாக்கும் |
கோகுல, பிருந்தாவன, துவாரகா பூமிக்கு
சிரம் தாழ்த்திய அனந்த கோடி நமஸ்காரம் ||
ஸ்ரீகிருஷ்ணனைப் போன்ற ஒரு நண்பன், குரு, தாய்-தந்தை வேறு எவரும் இருக்க முடியாது என்பதை உணர்பவனே உண்மையான பக்தன்! பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடம் பரிபூரணமாக சரணாகதி செய்யும் பக்தன் சம்சாரத்திலிருந்து முக்தி அடைகிறான். ஸ்ரீகிருஷ்ணனின் மேல் அபரிமித பக்தியுணர்வு மேலிட வைப்பதுவும் அவனின் திவ்ய ஜீவனுக்கு நெருக்கமாயும் உள்ள கோகுலம், பிருந்தாவனம் மற்றும் துவாரகை ஆகிய தெய்வீக க்ஷேத்திரங்களின் புகைப்படங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்பட ரூபமான நன்றியறிதலின் மூலமாக ஸ்ரீகிருஷ்ணனின் இருப்பை அனுபவிப்பதற்கு முயற்சி செய்வோம்!
ஜகத்குரு ஸ்ரீகிருஷ்ணன் என்றால் ஸாக்ஷாத் பரிபூரண அவதாரம் |
பக்தி, ஞானம் மற்றும் கர்மாவின் இறுதி இலக்கான இருப்பிடம் ||
கோபாலனின் பாலலீலையை அனுபவித்த கோகுலம்!

பகவத்பக்தியில் திளைத்து கிருஷ்ணமயமாகி
உள்ள தீர்த்த க்ஷேத்திரம் : பிருந்தாவனம்!


ஸ்ரீஹரியின் இருப்பை உணர்த்தும் துவாரகை!
