ஸாதகர்களின் வ்யஷ்டி ஸாதனையுடன் கூட ஸமஷ்டி ஸாதனைக்கான முயற்சியும் ஆழ்ந்த ஆர்வத்துடன் பக்தியுணர்வுடன் நடப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி எல்லாவிதங்களிலும் அவர்களுக்கு ஆதார தூணாக விளங்கும் ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே!
ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்களின் வ்யஷ்டி ஸாதனை சம்பந்தமான வழிகாட்டுதல் மற்ற ஸாதகர்களுக்கும் உதவும் என்று தொகுத்தளித்துள்ளார் டாக்டர் மாயா பாடீல்
4. ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே
அவர்கள் ஸாதகர்களின் வ்யஷ்டி ஸாதனையின்
மதிப்பாய்வை எடுக்கும் சிறப்பு மிக்க வழிமுறை!
4 ஊ 2. தத்துவ மற்றும் செயல்பாட்டு
பகுதிகளிடையே ஒரு பாலம் அமைத்தல்
இது போன்ற விஷயங்களை ஸாதகர்களுக்கு சிந்திக்க தரும்போது ஸாதகர்களின் தத்துவ பயிற்சி முதலில் நடைபெறுகிறது. அதன் மூலம் அவர்கள் செயல்பாட்டு முறையை செய்வதும் சுலபமாகிறது. அவர் ஸாதகர்களிடம் ‘இது போன்று எங்கு செய்ய முடிந்தது, எங்கு செய்ய முடியவில்லை?’ என்பதை குறிப்பெடுக்க சொல்வார். இத்தகைய பயிற்சியால் எல்லா ஸாதகர்களுக்கும் நன்மை ஏற்படுகிறது. ஸாதகர்களிடம் எந்த ஆளுமை குறைகள் மற்றும் தவறான சிந்தனைகள், எவ்வளவு சுய ஆலோசனை கொடுத்தும் குறையவில்லையோ அவை இவ்வாறு சிந்தனை செய்வதன் மூலம் ஒரு நிலைவரை குறைகிறது.
5. ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே
அவர்களின் வழிகாட்டுதலின்படி முயற்சி
செய்யும் ஸாதகர்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள்
5 அ. படிப்படியாக சஹஜமாக செய்யப்படும்
முயற்சிகளால் ஸாதகர்களிடம் நேர்மறை இயல்பு நிர்மாணமாகிறது
வ்யஷ்டி ஸாதனையின் உள்ளே ஏதாவது ஒரு முயற்சியை ஸாதகர்களால் செய்ய முடியவில்லை என்றால் ஸத்குரு தாதா அந்த ஸாதகர்களின் நிலைக்கேற்றவாறு படிப்படியாக முயற்சிக்கும்படி உற்சாகம் ஊட்டுவார். உதாரணத்திற்கு 5 முதல் 10 நொடிகள் ஆன்மீக உணர்வுபூர்வமான பிரயோகம் செய்வதற்கான இலக்கை வைத்துக் கொள்வது, பிரார்த்தனை, நன்றி தெரிவித்தல் மற்றும் அவசியத்திற்கேற்றபடி நாமஜபம் செய்வது போன்றவை. அதன் மூலம் ஸாதகர்கள் நம்பிக்கை இழக்காமல் ஆன்மீக உணர்வு விழிப்படைய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதனால் இறைவன் அவர்களிடம் நேர்மறை தன்மையை நிர்மாணிக்கிறார். ஸத்குரு தாதா ஸாதகர்களிடம் அவர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அட்டவணை நிரப்புதல், சுய ஆலோசனை வழங்குதல் போன்றவற்றை செய்ய சொல்லுவார்.
ஸாதகர்கள் ஆன்மீக உணர்வுபூர்வமான பிரயோகம் செய்ய ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு உள்ளாக அவர்களின் மனங்களில் நேர்மறை தன்மை ஏற்பட ஆரம்பிக்கின்றது. வ்யஷ்டி ஸாதனையில் எதை அவர்களால் செய்ய முடியவில்லை என நினைக்கிறார்களோ அதை சஹஜமாக அவர்களால் செய்ய முடிகிறது. அட்டவணை நிரப்புதல் மற்றும் சுய ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றை தொடர்ந்து அவர்களால் செய்ய முடிகிறது.
5 ஆ. ஸாதகர்களின் தன்னம்பிக்கை
அதிகமாகி அவர்களின் கண்களில் ஒரு மாறுதல் தெரிகிறது
இது போன்று ஸாதகர்கள் முயற்சி செய்வதால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகமாகிறது. அதனால் ஸாதகர்களிடம் மாறுதல் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதுவரை செய்ய முடியாது எனத் தோன்றும் விஷயங்களையும் சஹஜமாக செய்ய முடிவதால் ஸாதகர்களின் கண்களிலுள்ள உணர்வு வெளிப்பாடு மாறுகிறது.
6. ஸாதகர்களின் வ்யஷ்டி ஸாதனையுடன் கூட ஸமஷ்டி
ஸாதனையும் நல்ல முறையில் நடப்பதற்கான முயற்சிகள்!
6 அ. ‘எல்லா விதங்களிலும் ஸாதகர்களை தயார் செய்தல்’
என்பது மதிப்பாய்வு செய்வதன் முக்கியமான நோக்கமாக இருத்தல்
ஸத்குரு தாதா எடுக்கும் மதிப்பாய்விற்கு ஒரு குறிப்பிட்ட வரைமுறை இல்லை. ‘ஒவ்வொரு ஸாதகரும் தங்களுக்குள் இருக்கும் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை அகற்றி ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும்’, என்ற நோக்கத்துடன் கூட ‘ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனம் ஏற்படுவதற்காக எல்லா நிலைகளிலும் அயோக்கிய விஷயங்கள் யோக்கியமாக மாறுவதற்கு முயற்சி செய்தல் மற்றும் எல்லா விதங்களிலும் ஸாதகர்களை தயார் செய்தல்’, என்பதே ஸாதகர்களின் மதிப்பாய்வு எடுக்கும் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக அவர் ஸாதகர்களின் நிலை, அவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் அவர்களின் வயது ஆகியவற்றிற்கு ஏற்ப ஸாதகர்கள் மூலமாக வ்யஷ்டி நிலையில் வெவ்வேறு பிரயோகங்களை செய்ய வைத்து மற்றும் ஆன்மீக நிவாரணத்தைக் கூறி அவர்களுக்கு உதவி செய்வார்.
6 ஆ. ஸமஷ்டி நிலையில் ஆச்ரம
மற்றும் பிரசார சேவைகளை நெறிப்படுத்த வழிநடத்தி
ஸாதகர்களிடம் ‘பரந்த மனப்பான்மை’ என்ற குணம் வளர உதவுதல்
ஸத்குரு தாதா ஸமஷ்டி நிலையில் ஆச்ரம மற்றும் பிரசார சேவைகளை நெறிப்படுத்த வழிகாட்டுகிறார். ‘ஸாதகர்கள் தங்களின் ஆளுமை குறைகளைக் களைதல், அஹம்பாவத்தைக் குறைத்தல் என்பதை மட்டுமே லட்சியமாக கொள்ளக் கூடாது, மாறாக ‘பராத்பர குருதேவரின் ‘ஹிந்து ராஷ்ட்ரத்தை ஸ்தாபனம் செய்வது’ என்ற லட்சியத்தை பூரணமாக்குவதற்கு எல்லா நிலைகளிலும் முயற்சி செய்தல் என்பதும் நம் கடமையாகிறது’, என்பதை ஸாதகர்களுக்கு உணர்த்துகிறார். அதன்படி ‘எவ்வாறு முயற்சிப்பது?’ என்பதையும் ஸாதகர்களுக்கு சொல்லுகிறார். அதன் மூலம் ஸாதகர்களிடம் இறைவனின் ‘பரந்த மனப்பான்மை’ என்ற குணம் வளர ஆரம்பிக்கிறது. இவை எல்லாவற்றின் பலனாக ஸாதகர்களிடம் குறைந்த காலத்திற்குள் மாற்றம் ஏற்படுகிறது; அத்துடன் ‘சேவைகளை நெறிப்படுத்தும் செயல்முறை ஆரம்பமாகி விட்டது’ என்பதையும் உணர முடிகிறது.
ஸாதகர்கள் சேவை செய்யும்போது நடக்கும் தவறுகளை தங்களின் அட்டவணையில் எழுதுகின்றனர். இந்த செயல்முறை ஸமஷ்டியுடனும் சம்பந்தப்பட்டது. ‘ஸமஷ்டி நிலையில் தவறான காரியங்கள் நடைபெறாமல் இருக்க நாமும் ஒரு கருவியாக உள்ளோம். இந்த சம்பவத்தில் ஸமஷ்டியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நான் என்ன முயற்சி செய்ய முடியும்?’ என்ற வழிகாட்டுதலைத் தருவதால் நாளடைவில் ஸமஷ்டியில் நடக்கும் தவறான காரியங்கள் குறைய ஆரம்பிக்கின்றன என்பது கவனத்திற்கு வருகிறது.
7. வ்யஷ்டி மற்றும்
ஸமஷ்டி நிலையில் என்ன கண்ணோட்டம்
வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக்குதல்
7 அ. சம்பவம்
சில ஸாதகர்கள் ‘ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று ரெயிலிலிருந்து பொருட்களைக் கொண்டு வர வேண்டும் என்ற தகவல் கேட்டதும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ‘ஸாதகர்கள் இறுதி நேரத்தில் ஏன் இந்த சேவை பற்றி சொல்கின்றனர்?’ என்று மனதில் எதிர்மறை எண்ணம் எழுந்தது என்று அட்டவணையில் எழுதுகின்றனர்.
இங்கு அந்த ஸாதகர் அப்போருட்களைக் கொண்டு வருவது அத்தியாவசியமாகிறது. ரயில் பிளாட்பாரத்திற்கு வரும் முன்னரே அங்கு செல்ல வேண்டும்; காரணம் பொருட்களைக் கொண்டு வரும் ஸாதகர் அந்த ஸ்டேஷனில் இறங்கப் போவதில்லை. ரெயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேறு எந்த ஸாதகரும் இல்லை. ‘திடீரென்று இறுதி நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்திற்கு என்ன மாற்று யோசனை செய்வது?’ என்பது பற்றி யோசிப்பதால் ஸாதகர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
7 அ 1. வ்யஷ்டி நிலையில் இருக்க வேண்டிய கண்ணோட்டம்
7 அ 1 அ. பொறுப்பான ஸாதகர்களை விசாரித்து அதிலிருந்து தீர்வை தீர்மானித்தல் :
‘நாம் ஒவ்வொரு நிகழ்வையும் அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’, என்பதற்காக இறைவன் எல்லாவற்றையும் நடத்துவிக்கிறார். நாம் குருகாரியத்திற்காக நம்மை ஸமர்ப்பித்து உள்ளோம். அதனால் இது போன்ற நிகழ்வுகளால் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றக் கூடாது. மன அழுத்தம் ஏற்படுவதால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது, மாறாக பிரச்சனை மேலும் தீவிரமாகிறது. நம்மால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாவிட்டால் பொறுப்பேற்றிருக்கும் ஸாதகரை விசாரித்து தீர்வை நிர்ணயிக்க வேண்டும். அப்பொழுது மன அழுத்தம் ஏற்படாது.
7 அ 1 ஆ. ‘ஸாதகர்கள் இறுதி நேரத்தில் ஏன் கூறினார்கள்?’ என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்
அவர் ஸமஷ்டி கண்ணோட்டத்தில் ஸாதகர்கள் கீழே கூறப்பட்டுள்ள செயல்முறையை செய்யுமாறு கூறுகிறார். இங்கு ‘ஸாதகர் ஏன் இறுதி நேரத்தில் கூறினார்?’ என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ‘ஸாதகருக்கு இறுதி நேரத்தில் ஏதோ தடங்கல் ஏற்பட்டதால் இவ்வாறு கூறினார்’ என்பது தெரிந்தவுடன் நம் மன அழுத்தம் குறைகிறது.
7 அ 2. ஸமஷ்டி நிலையில் கொள்ள வேண்டிய கண்ணோட்டம்
7 அ 2 அ. ஸாதகரைப் பற்றி பொறுப்பான ஸாதகரிடம் தெரிவிக்கவும்
ஸாதகரின் ஆளுமை குறையால் தவறு ஏற்பட்டது என்றால் அதைப் பற்றி அந்த ஸாதகரின் பொறுப்பேற்றிருக்கும் ஸாதகரிடமும் ஆச்ரமத்தில் இந்த சேவை சம்பந்தமாக பொறுப்பேற்றிருக்கும் ஸாதகரிடமும் எழுதித் தர வேண்டும். அதனால் அந்த ஸாதகருக்கு ஸாதனை சம்பந்தமான உதவி கிடைக்கும்.
ஒரு குறிப்பிட்ட ஸாதகர் மூலமாக இது போன்ற தவறுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மேற்கொண்டு ஆச்ரமத்திலுள்ள பொறுப்பான ஸாதகரிடமும் தெரிவிக்க வேண்டும்.
இது போன்று ‘வெறும் வ்யஷ்டி மட்டுமல்லாமல் எல்லா நிலைகளிலும் ஸாதனையை நெறிப்படுத்த முயல வேண்டும்’, என்பதே நமது ஸமஷ்டி ஸாதனையாகிறது. இது போன்று செய்வதால் ஸாதகர் தன் சம்பந்தமாகவும் நடைபெறும் நிகழ்வு சம்பந்தமாகவும் வியாபகமான நிலையில் சிந்தனை செய்து செயல்பட ஆரம்பிக்கிறார்.
7 ஆ. இரண்டாவது நிகழ்வு
‘ஆச்ரம சேவைக்காக பொறுப்பான ஸாதகர் இறுதி நேரத்தில் வினவுகிறார். அப்பொழுது ‘என்ன இவர் தினசரி செய்ய வேண்டிய சேவைகளின் திட்டத்தை சரிவர வகுக்கவில்லையா?’, என்ற எதிர்மறை எண்ணம் மனதில் ஏற்படுகிறது.
இங்கு சில சமயம் ஸாதகர்கள் சேவையை ஏற்றுக் கொள்கிறார்கள், சில சமயம் ஏற்றுக் கொள்வதில்லை.
7 ஆ 1. வ்யஷ்டி நிலையில் கொள்ள வேண்டிய கண்ணோட்டம்
7 ஆ 1 அ. தடங்கல் ஏதுமில்லை என்றால் நன்றியுணர்வுடன் சேவையை ஒப்புக் கொள்ளுதல்
வ்யஷ்டி ஸாதனைப்படி உங்களுக்கு ஏதும் தடங்கல் இல்லையென்றால் சேவையை ஏற்றுக் கொள்ள வேண்டும். சேவையை ஏற்றுக் கொள்ளும்போது மனதில் எதிர்மறை எண்ணம் தோன்றினால் ஸாதனையின் பலன் சிறிதளவே கிடைக்கும். அதனால் ஸாதகர்கள் நன்றியுணர்வுடன் சேவையை ஏற்றுக் கொண்டு செய்ய வேண்டும்.
7 ஆ 2. ஸமஷ்டி நிலையில் கொள்ள வேண்டிய கண்ணோட்டம்
7 ஆ 2 அ. ஆச்ரமத்தில் சேவை புரியும் ஸாதகருக்குத் தெரிவித்தல்
இது போன்ற நிகழ்வை ஆச்ரமத்தில் சேவை புரியும் பொறுப்பான ஸாதகரிடம் எழுதிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் ஸாதகருக்கு ஏற்படும் தடங்கல்களை பொறுப்பான ஸாதகர்கள் தீர்த்து வைப்பர்.
இது போன்று முயற்சிப்பதால் வ்யஷ்டி நிலையில் கொள்ள வேண்டிய கண்ணோட்டம், ஆளுமை குறைகளுக்கு ஏற்ப சுய ஆலோசனை வழங்குதல், ஆகியவற்றை செய்வதுடன் கூட ஸமஷ்டி நிலையிலும் முயற்சித்தால் ஸமஷ்டியிலும் மாற்றம் நிகழும், அத்துடன் தவறுகள் குறைவதால் எல்லோருக்கும் ஸாதனை செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகும்.
8. ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்கள்
அளித்துள்ள மேலும் ஊக்கமளிக்கும் கண்ணோட்டம்
அ. ‘நீங்கள் இறைவனை அடைவதற்காக வேண்டி எல்லாவற்றையும் தியாகம் செய்து வந்துள்ளீர்கள். அப்படியென்றால் ‘உங்களுக்கு நாள் முழுவதும் இறைவனின் நினைவு எவ்வளவு முறை வர வேண்டும்?’, என்பதை பயின்று அதற்கேற்ப ஆன்மீக உணர்வுபூர்வமான பிரயோகங்களை நிர்ணயிக்க வேண்டும்.’
அவரின் இந்த ஒரு வாக்கியத்தால் ஸாதகர்கள் மனதை உள்முகப்படுத்தி அதிகபட்ச அளவு ஆன்மீக உணர்வுபூர்வமான பிரயோகம் மற்றும் இறைவனின் ஸ்மரணம் நடப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
ஆ. ‘உங்களின் மனம் சிறு குழந்தையை ஒத்தது. அதை சுய ஆலோசனை வழங்குவதன் மூலம் நம் பக்கம் வளைக்க வேண்டும்’, என்பதை கவனத்தில் கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.
இ. உங்களின் சித்தத்தில் பல பிறவிகளின் எண்ணப்பதிவுகள் உள்ளன. அதனால் அவற்றை நஷ்டமடைய செய்ய அதிக காலம் பிடிக்கும். நீங்கள் எந்த அளவு அதிகமாக சுய ஆலோசனை வழங்குகின்றீர்களோ அந்த அளவு இந்த எண்ணப்பதிவுகள் குறையும்.
ஈ. ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறை கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. நீங்கள் அதிலுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுத் தெளிய வேண்டும்.
9. மதிப்பாய்வு எடுப்பதன் மூலமாக ஸாதகர்களின்
ஆதாரத் தூணாக விளங்கும் ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே!
9 அ. ஸாதகர்கள் தவறுகள் மற்றும் தடங்கல்களில்
மாட்டிக் கொள்ளாமல் அதற்கான தீர்வை அவர்களுக்கு
அளிப்பதால் அவர்கள் வெளிப்படையாக மனந்திறந்து பேச ஆரம்பித்தல்
ஸாதகர்கள் தங்களால் நேர்ந்த தவறுகள் மற்றும் தங்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களை ஸத்குரு தாதாவிடம் கூறியவுடன் அவர் ஸாதகர்களிடம் ‘தவறுகள் மற்றும் தடங்கல்களில் மாட்டிக் கொள்ளாமல் அவற்றிற்கான தீர்வை எவ்வாறு காண்பது?’ என்பது பற்றி விரிவாக எல்லாக் கோணங்களிலும் கூறுகிறார். அவற்றில் எந்த விஷயத்தை முதலில் செய்ய முடியுமோ அதை செய்ய சொல்வதால் ஸாதகர்கள் செயல்பாட்டில் இறங்குவது சுலபமாகிறது. அதன் மூலம் ஸாதகர்களும் வெளிப்படையாக மனந்திறந்து பேச ஆரம்பிக்கின்றனர்.
9 ஆ. ஸத்குரு தாதாவிடம்
ஸாதகர்களின் மனங்களில் எதிர்மறை எண்ணங்கள்
ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி
இருப்பதால் ஸாதகர்கள் அவரை பெரும் ஆதாரமாகக் கொள்கின்றனர்
ஸத்குரு தாதாவின் மனதில் ‘ஸாதகர்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை’, என்ற எதிர்மறை எண்ணம் எப்பொழுதும் தோன்றுவதில்லை. ஸாதகர்களின் ஆளுமை குறைகள் அவர் மீது எவ்வித பரிணாமமும் ஏற்படுத்தாததால் ஸாதகர்கள் தங்களின் நம்பிக்கையை இழப்பதில்லை. ஸாதகர்கள் மூலமாக முயற்சி நடக்கவில்லை என்றாலும் அவர் அதைப் பற்றி சிந்தனை செய்வார். ‘ஸாதகரின் நிலைக்கு சென்று எவ்வாறு அவர்களுக்கு உதவ முடியும்?’ என்ற எண்ணமே அவர் மனதில் மேலோங்குவதால் அவர் ஸாதகர்கள் செய்யக் கூடிய வண்ணம் உபாயங்களை சொல்வார். அச்சமயத்தில் ஸத்குரு தாதாவிடமிருந்து ‘நீங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை’ என்ற வார்த்தைகள் வெளிவருவதில்லை, அத்துடன் அவரின் நடவடிக்கைகள் மூலமும் இது வெளிப்படுவதில்லை. அதனால் ஸாதகர்களுக்கு அவர் பெரிய ஆதாரமாக விளங்குகிறார்.
‘பராத்பர குருதேவா, ‘ஸனாதனின் மகான்கள் வெறும் மகான்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குரு ஆவார்கள்’, என்ற வாக்கியத்தின் உண்மையான அர்த்தத்தை நாங்கள் ஸத்குரு ராஜேந்திர தாதா அவர்களின் மதிப்பாய்வு விதத்தின் மூலம் உணர்கிறோம். உங்களின் அருளால் ஸத்குரு தாதா ஸாதகர்களாகிய எங்களின் ஸாதனை நடப்பதற்கு உதவி வருகிறார். இதற்காக ஸாதகர்களாகிய நாங்கள் அனைவரும் உங்களின் திருவடிகளில் கோடி கோடி நன்றி கலந்த நமஸ்காரங்களை ஸமர்ப்பிக்கிறோம். ‘எங்களின் ஆன்மீக முன்னேற்றம் நடப்பதற்காக ஸத்குரு தாதா என்ன உதவி செய்கிறாரோ அதன்படி எங்களின் மூலமாக செயல்பாடுகள் நடக்க வேண்டும்’, என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் உங்களின் சரணங்களில் பிரார்த்தனை செய்கிறோம் !’