பராத்பர குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே அவர்களின் ஈடு இணையற்ற குணங்களின் ஒரு அறிமுகம்

 

1. பராத்பர குரு டாக்டர் ஜயந்த்
ஆடவலே அவர்களின் ஈடு இணையற்ற

‘ஸனாதன் ஸன்ஸ்தா’வின் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் அரிதாகத் தோன்றும் ஒரு மகாபுருஷராவார். அவரின் குணங்களை இந்த குருபூர்ணிமா மகோத்சவத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கம் அவரின் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி வாழ்க்கை அனைவருக்கும் ஆதர்சமாக இருப்பது என்பதால். ஸ்தூலமாக அவர் செய்துள்ள காரியங்களிலும் இது மிளிர்கிறது.

அ. 26.6.2019 வரை பராத்பர குரு டாக்டர் அவர்களின் வழிகாட்டுதல்படி ஸாதனை செய்ததால் 100 ஸாதகர்கள் மகான் நிலை அடைந்துள்ளனர், மற்றும் 1252 ஸாதகர்கள் மஹானின் நிலையை நோக்கி முன்னேறி வருகின்றனர்!

ஆ. ஆயிரக்கணக்கான ஸாதகர்களுக்கு விரைவாக இறைவனை அடைவதற்கான வழிகாட்டுதலை வழங்கும் முக்கிய 5 ஸன்ஸ்தாக்களின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர். தேசப்பற்று மற்றும் தெய்வப்பற்று நிரம்பிய ஸாதகர்களை உருவாக்கும் 10 ஆச்ரமங்களை நிர்மாணித்தவர் அவர்.

இ. அவர் மூலமாக அகில மனித குலத்திற்கு தர்மம், ஆன்மீகம், ஸாதனை, தேச கட்டமைப்பு பற்றி வழிகாட்டுதல் வழங்கும் 316 நூல்களை ஜூன் 2019 வரை 17 மொழிகளில் 76 லக்ஷம் 86 ஆயிரம் பிரதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. மேலும் 8000 நூல்கள் வெளிவர இருக்கின்றன.

ஈ. அவரின் காரியங்கள் ஸ்தூலத்துடன் நின்று விடவில்லை, மாறாக சூட்சுமமாகவும் வியாபகமாக உள்ளது.

உ. பாரதம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான ஹிந்து ஸ்தாபனங்களை ஒரே வியாசபீடத்தில் அமர வைக்கும் ‘அகில பாரதீய ஹிந்து மாநாட்டின்’ ஊற்றுக்கண்ணாகவும் விளங்குபவர் அவர்.

சிறிதும் விளம்பரம் இல்லாமல் அவரின் வாழ்க்கை நடப்பதால் அவரின் குண சிறப்புகளை எல்லோருக்கும் எடுத்துரைப்பது அவசியமாகிறது. எல்லா இடங்களிலும் உள்ள ஸாதகர்களுக்கு பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் குரு ஸ்வரூபமானவர். அதனாலேயும் உங்களுக்கு உங்களின் குருவின் குணங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது ஸாதனையின் கண்ணோட்டத்தில் மிகவும் அவசியமாகிறது. இறைவனைப் பற்றிய குண சிறப்புகளின் ஞானம் நமக்கு ஏற்படும்போது இறைவனிடம் நமக்கு ச்ரத்தை உண்டாகிறது. அதேபோல் குருவின் குண சிறப்புகள் சம்பந்தமான ஞானம் நமக்குக் கிடைக்குமானால் நம்மிடம் குருவின் மீது பற்றுதல் மற்றும் குருபக்தி அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. இன்று குருபூர்ணிமா, குருவிற்கு நன்றி செலுத்தும் நாள். இன்றைய சுபதினத்தில் குருவைப் பற்றிப் போற்றிப் புகழும் வாய்ப்பு கிடைத்ததற்கு ஸ்ரீகுருசரணங்களில் நன்றி தெரிவிக்கிறேன். அதேபோல் குருவின் மகத்துவத்தைப் பற்றிக் கேட்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தமைக்கு நீங்களும் நன்றி உணர்வுடன் கேட்குமாறு வேண்டிக் கொள்கிறேன். இத்தகைய தெய்வீக குணங்களை நம்முள் வளர்த்துக் கொள்ளும் ஸங்கல்பத்தை நாம் இன்று எடுத்துக் கொள்வோம்.

 

2. வ்யஷ்டி வாழ்க்கை
ஆதர்சமாக உருவாவதற்கு உதவும் குணங்கள்

2அ. சிக்கனம்

பண வரவு மிகக் குறைவாக இருந்தாலும் பராத்பர குரு டாக்டர், ‘சிக்கனம்’ என்ற குணத்தால் ‘ஸனாதன் ஸன்ஸ்தா’வின் திவ்ய உன்னத காரியங்களை குறைந்த காலத்திற்குள் நடத்திக் காட்டியுள்ளார். காரியம் ஆரம்பமாகும் சமயத்தில் அவர் அளித்த கண்ணோட்டம், ‘இறைவனிடம் கஞ்சத்தனம் இல்லை; ஆனால் சிக்கனம் உண்டு. இறைவன் எல்லா காரியங்களும்  செவ்வனே நடப்பதற்கு பணம் மற்றும் நிலம், நீர், சூரிய ஒளி, காற்று போன்ற எல்லா இயற்கை வளங்களையும் தந்தருளியுள்ளார். இவற்றை நாம் சிக்கனமாக உபயோகித்தால் என்றைக்கும் பணப் பற்றாக்குறை ஏற்படாமல் இறைவனே காரியங்களை நடத்தித் தருவார்!’ அவரின் இந்த வழிகாட்டுதலின்படி இன்று ஸனாதனில் எல்லா காரியங்களும் நடக்கின்றன. அவற்றின் சில உதாரணங்களை இப்பொழுது பார்ப்போம்.

1. ஆச்ரமத்தில் ஒரு பக்க வெற்றிடமுள்ள காகிதங்கள், மருந்து பாக்கெட்டுகளில் உள்ள ஒரு பக்க வெற்றிட காகிதங்கள் ஆகியவை உபயோகப்படுத்தப் படுகின்றன. ஸன்ஸ்தாவின் காரியங்களுக்கு மற்றும் ‘ஸனாதன் பிரபாத்’ காரியாலயத்தில் கணினி பிரதிகள் எடுப்பதற்கு ஏற்கனவே உபயோகப்படுத்திய ஒருபக்க ஏ-4 காகிதங்களே பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 20 வருடங்களில் அரசாங்க வேலைக்காக எடுக்கப்படும் பிரதிகள் தவிர மற்ற எல்லா காரணங்களுக்கும் இது போன்ற ஒரு பக்க வெற்றிட காகிதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து இன்றுவரை எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

2. ஆச்ரம கட்டட வேலைகளுக்காக ஏற்படும் செலவுகளைக் குறைக்க பெரிய கட்டடங்களின் பழைய கதவுகள், பெரிய ஸ்தாபனங்களின் பழைய நாற்காலி மேசைகள் மற்றும் கணினிகள் வாங்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுகின்றன. இது சம்பந்தமாக பராத்பர குரு டாக்டர் வேடிக்கையாக சொல்வார், ‘ஸனாதனின் ஆச்ரமம் பழைய சாமான்கள் ஆச்ரமம்!’ இதன் அர்த்தம் ‘பழைய சாமான்கள் கொண்டு உருவான ஆஸ்ரமம்’.

3. பராத்பர குரு டாக்டர் அவர்களின் அறையில் எவ்வித அலங்காரமும் செய்யப்படவில்லை. அறையில் ஏசி இருந்தாலும் அதை அவர் எப்பொழுதும் உபயோகப்படுத்தியதில்லை. அவர் கூறுவார், ‘ஸாதகர்களுக்கு ஏசி வசதி  இல்லாதபோது எனக்கு மட்டும் எதற்கு?’ அவர் அறையில் அவர் உபயோகிக்கும் மேசை, நாற்காலி, மின்சார விசிறி மற்றும் அலமாரி ஆகிய அனைத்தும் அர்ப்பணமாக வந்த உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள்  ஆகும்.

2ஆ. மற்றவர்களைப் பற்றி சிந்திப்பது

இந்த குணத்தை பராத்பர குரு அவர்களின் நேரிடையான செயல்களின் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

1. பராத்பர குரு டாக்டர் அவர்கள், ‘யாராவது ஒரு ஸாதகர் அறையில் உறங்கிக் கொண்டிருந்தால் அங்கு சப்தம் எழுப்பக் கூடாது மற்றும் விளக்கை போடக் கூடாது’ என்ற நியமத்தை எல்லோரும் பின்பற்றுமாறு செய்துள்ளார். இந்த செயல்பாட்டின் பின்னால், ‘ஸாதகர்களின் உறக்கம் கலையக் கூடாது’ என்ற சிந்தனை உள்ளது.

2. ‘ஆச்ரமத்தில் யாராவது ஒரு ஸாதகருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரின் அறையிலுள்ள மற்ற ஸாதகர்கள் அவருக்கு வேளைக்கு வேளை மருந்து கொடுத்தல், உணவு பரிமாறுதல், அவரின் ஆடைகளை தோய்த்தல் ஆகியவற்றை கவனிக்க வேண்டும்’ என்று கற்றுக் கொடுத்துள்ளார். அதனால் ஆச்ரமத்தில் யாராவது ஸாதகருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர் வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு அவர்களின் வீட்டைப் போன்ற கவனிப்பு, உபசரிப்பு ஆச்ரமத்திலும் கிடைக்கிறது.

2இ. விளம்பரத்தை நாடாது இருத்தல்

இது பராத்பர குருவின் இயல்பான குணமாகும்.

1. பராத்பர குரு அவர்கள் எழுதியுள்ள நூலில் அவர் தன்னைப் பற்றி ‘எழுதியவர்’ என குறிப்பிடாமல் ‘தொகுத்தவர்’ என்றே குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறுகிறார், ‘இந்நூலிலுள்ள சாரமான புத்தியால் பெறப்பட்ட ஞானம் பல்வேறு நூல்களைப் பயின்றதால் எனக்குக் கிடைத்துள்ளது. அத்துடன் புத்திக்கு அப்பாற்பட்ட ஞானம் சூட்சுமமாகவும் (இறைவனிடமிருந்து) கிடைத்துள்ளது. நான் அவற்றை வெறும் தொகுத்தளித்து உள்ளேன்.
எழுதியவன் இல்லை!’

2. ‘ஸனாதன் ஸன்ஸ்தா’ ஸ்தாபனம் ஆனதிலிருந்து இன்றுவரை ஸன்ஸ்தாவின் நிகழ்ச்சிகள் மற்றும் சபாக்கள் ஆகியவற்றின் ‘போஸ்டர்கள்’ மற்றும் வேறு பிரசார பொருட்களில் அவரது புகைப்படம் இல்லை. ‘ஹிந்து ராஷ்ட்ர ஜாக்ருதி சபா’வின் வியாசபீடத்தின் பின்னணி பானர் மற்றும் ‘ஹிந்து மாநாடு’ நிகழ்ச்சியின் பானர் ஆகியவற்றிலும் எங்கேயும் பராத்பர குரு டாக்டரின் புகைப்படம் இல்லை.

2ஈ. எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருப்பது

பராத்பர குரு டாக்டர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாததால் அவரின் அறையை விட்டு வெளியே வருவதில்லை. சதாசர்வ காலமும் அவர் தர்மகாரியங்களுக்காக தன் நேரத்தை செலவிடுகிறார். விடியற்காலை முதல் இரவு வெகு நேரம் வரை தர்மகாரியங்களில் ஈடுபடும்போது அவர் கண நேரம் கூட வீணாக்குவதில்லை. ‘உடல்நிலை கை கொடுக்கவில்லை’ என்றால் மட்டுமே அவர் ஓய்வு எடுத்துக் கொள்வார்.

உணவருந்தும் சமயத்திலும் படித்தல், அதில் அவசியமானவற்றை குறிப்பெடுத்துக் கொள்ளுதல்; உடல்நிலை வெகு மோசமாக இருக்கும் சமயத்திலும் படுக்கையில் சாய்ந்து படுத்துக் கொண்டே கட்டுரைகளைப் படித்தல், அதில் பென்சில் மூலமாக குறிப்பு எழுதுதல் போன்ற சேவைகளை அவர் செய்கிறார். இரவு உறங்கும்போது ஒரு பென்சில் மற்றும் காகிதத்தை அருகில் வைத்துக் கொண்டு படுக்கிறார். உறங்கும் சமயத்திலும் ஏதாவது குறிப்பு கவனத்திற்கு வந்தால் அதை எழுதிக் கொள்கிறார்.

2உ. ஆதர்ச முறையை நடைமுறைப்படுத்துதல்

ஸனாதன் ஆச்ரமத்தில் இப்பொழுது எந்த அளவிற்கு நல்ல அமைப்பு முறை காணப்படுகிறதோ அது பராத்பர குரு டாக்டர் அவர்கள் தன் வாழ்வில் சுயமாக நடைமுறைப்படுத்துவது ஆகும். அவர் நடைமுறையில் செய்து காட்டிய ஆதர்ச செயல்பாடுகள் இன்று ஆச்ரமத்தில் மற்றும் ஸன்ஸ்தாவின் காரிய முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவற்றின் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1. ராம்னாதி ஆச்ரமம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை பலமுறை ஆபத்துக் கால நிலை ஏற்பட்டிருந்தாலும் அன்னபூர்ணா துறையினால் இதுவரை ஸாதகர்களுக்கு மகாபிரசாதம் தாமதமானதில்லை.

2. ஆச்ரமத்தில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஸாதகர்களில் பலர் வயதானவர்கள், சிலர் நோய்வாய்ப்பட்டவர்கள். நூற்றுக்கணக்கான ஸாதகர்களுக்கு உணவு தயாரிக்கும்போது வெவ்வேறான பத்தியம் கொண்ட ஒவ்வொரு ஸாதகருக்கும் அவருக்கு ஏற்றார்போல் மதிய உணவு, காலை உணவு தயாரிக்கப்படுகிறது. உதாரணம், டயாபடீஸ், இதயநோய்
போன்றவருக்கு தேவையான பத்திய உணவு.

3. குளித்த பின் குளியலறையில் விழுந்த முடிகளை அகற்ற சிறு சிறு காகித துண்டுகள் ஒவ்வொரு குளியலறையிலும் வைக்கப்பட்டுள்ளன.

4. குளியலறை மற்றும் கழிப்பறையை உபயோகித்த பின்னர் அங்கு தரையில் விழுந்த நீரை உலர்ந்த துணியால் துடைத்து சுத்தப்படுத்தும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

5. தினமும் சுத்தப்படுத்தும் காரியங்களுடன் கூட ஒவ்வொரு மாதமும் ஆச்ரமத்தில் உள்ள ஒவ்வொரு துறையிலும் சமூகமாக சேர்ந்து சுத்தப்படுத்துகின்றனர். வீட்டை சுத்தப்படுத்துவதற்கும் ஆச்ரமத்தை சுத்தப்படுத்துவதற்கும் என்ன வேறுபாடு உள்ளது என்ற கேள்வி எழலாம்? ஆச்ரமத்தை சுத்தப்படுத்தும்போது ஒவ்வொரு பொருளும் நகர்த்தப்பட்டு
அவ்விடம் சுத்தப்படுத்தப்படுகிறது. சுத்தப்படுத்துவது எந்த வரிசைக்கிரமப்படி செய்ய வேண்டும் என்பதும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஒட்டடை அடித்தல், மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை சுத்தப்படுத்துதல், அதன் பிறகு பரணைகளை சுத்தப்படுத்துதல், பின்பு ஜன்னலின் உள்ளும் புறமும் சுத்தம் செய்தல், பிறகு மற்றப் பொருட்களை சுத்தம் செய்தல், அதன் பின்னரே தரையைப் பெருக்கி மெழுகுதல் போன்றவை. ஆச்ரமத்தின் மேல் மாடியிலிருந்து ஆரம்பித்து பின்பு
ஒவ்வொரு தளமாக சுத்தப்படுத்தப்படுகிறது.

2 ஊ. ஒவ்வொரு ஜீவன் மீதும் உள்ள ப்ரீதி

 1. யாராவது ஒரு ஸாதகர் சிறிதளவு நல்ல காரியத்தை செய்திருந்தாலும், உதாரணத்திற்கு நல்ல ஒரு கட்டுரை எழுதியிருந்தால், கவிதை

எழுதியிருந்தால், நல்ல ஒரு சிந்தனை ஏற்பட்டிருந்தால் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவரை ஒரு அன்புத் தந்தையைப் போன்று பாராட்டுவார், அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு அன்புத் தாயைப் போன்று ‘தின்பண்டம்’ அனுப்புவார்.

2. ஆஸ்ரமத்திலிருந்து வீடு அல்லது வேறு ஜில்லாவிற்கு செல்லும் ஸாதகருக்கு அவருக்கு

தின்பண்டம் தருவது மட்டுமல்லாமல் அவரது ஜில்லாவில் உள்ள மகான், சேவாகேந்திரம், நல்ல முயற்சி புரியும் ஸாதகர் ஆகியோருக்கும் அன்புடன் தின்பண்டங்களை கொடுத்தனுப்புவார்.

 

3. ஸமஷ்டி காரியங்களை செய்வதற்கு உகந்த சில குணங்கள்

3அ. ப்ரீதியுடன் அனைவரையும் ஒருங்கிணைத்தல்

சந்திக்கும் ஒவ்வொருவரையும் குடும்பத்தின் அங்கத்தினராக்குவது என்பது ஒருங்கிணைக்கும் குணத்தின் ஒரு அம்சம் ஆகும். ஆச்ரமத்தில் உள்ள ஸாதகர்களை தன் சொந்த குழந்தைகளைப் போல் பார்த்துக் கொள்கிறார்.

ஒவ்வொரு ஸாதகரின் பிறந்த நாளையும் கொண்டாடுவது, ஸாதகர்களின் குடும்ப அங்கத்தினர்களைப் பற்றி அன்புடன் விசாரிப்பது, ஸாதகர்களின் நல்ல காரியங்களை பாராட்டுவது போன்ற அம்சங்களால் அவர் தன்னலமில்லாது ஆன்மீக உணர்வுடன் காரியங்களை செய்யும் ஸாதகர்களை ஒருங்கிணைத்துள்ளார். அவரின் இந்த குணத்தால் ஸாதகர்களின் பல குடும்ப அங்கத்தினர்களும் ‘முழு நேர ஸாதகர்களாக’ காரியங்களில் ஈடுபட
ஆரம்பித்துள்ளனர்.

3ஆ. மனிதர், பொருட்கள், வாஸ்து
மற்றும் சுற்றுப்புற சூழல் ஆகியவற்றில் ஏற்படும்
மாறுதல்களை ஆன்மீக ஆராய்ச்சி நோக்குடன் பார்த்தல்
மற்றும் அதிலுள்ள ஆன்மீக சாஸ்திரத்தை சமூகத்தினருக்கு எடுத்துரைத்தல்

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் இயல்பாகவே ஆராய்ச்சி செய்யும் பண்பைக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு சம்பவத்தின் சூட்சும பயிற்சி மற்றும் அதிலுள்ள உள்ளார்ந்த காரணத்தைக் கண்டுபிடித்தல் ஆகியவை அவரின் அடிப்படை இயல்புகளாகும். அவர் மனிதர், பொருட்கள், வாஸ்து மற்றும் சுற்றுப்புற சூழல்
ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்களை ஆன்மீக ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் பார்க்கிறார். அதனால் சாதாரண மனிதருக்கு என்றுமே விளங்காத பல ஆன்மீக மாறுதல்களைப் பற்றிய ஞானம் ஆச்ரம ஸாதகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆச்ரமத்தில் உண்டாகும் சூட்சும நாதம், சுவரில் உணரப்படும் அதிர்வலைகள், ஜன்னலின் கண்ணாடி கதவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், உயிரில்லாத பொருட்களின் அதிர்வுகள், ஆச்ரமத்தில் பல இடங்களில் உண்டாகும் தெய்வீக சுகந்தம், அவரின் உடலிலும் ஸாதகர்களின் உடல்களிலும் ஏற்படும் சிறப்பு வாய்ந்த மாறுதல்கள், பல்வேறு இடங்களில் தானே தோன்றும் உருவமைப்புகள் போன்ற பல உதாரணங்கள் பராத்பர குரு டாக்டரின் ஆராய்ச்சி கண்ணோட்டத்தால் ஸாதகர்களுக்கு புரிய வந்துள்ளது. முதலில் இந்த மாற்றங்கள் பராத்பர குரு டாக்டரின் சூட்சும பார்வைக்கு தெரிய வந்தது. பின்பு பல மாற்றங்கள் ஸ்தூலத்திலும் தெளிவாக வெளிப்பட ஆரம்பித்தன. அவர் இந்த மாற்றங்களை விஞ்ஞான மற்றும் ஆன்மீக கண்ணோட்டத்துடன் பரிசீலனை செய்து பின் அதிலுள்ள ஆன்மீக சாஸ்திரத்தை விளக்கினார். நாம் அக்கம் பக்கத்தில் நிகழும் பல மாற்றங்களை கவனிப்பதில்லை. ஆனால் பராத்பர குரு டாக்டரின் ஆய்வு செய்யும் இயல்பால் இந்த மாற்றங்கள் மற்றும் அதிலுள்ள ஆன்மீக சாஸ்திரம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மனிதகுல நன்மைக்காக கிடைக்கப் பெற்றுள்ளன. அவரின் இந்த ஆய்வு செய்யும் இயல்பால் அக்டோபர் 2016 முதல் மார்ச் 2019 வரை 11 ராஷ்ட்ரீய மற்றும் 45 அகில உலக விஞ்ஞான மாநாடுகளில் ஆன்மீகம், ஸம்ஸ்க்ருத மொழி, நாமஜபம், மந்திரஜபம், பாரதீய சாஸ்த்ரீய சங்கீதம், நாட்டியம், மூர்த்தி கலை போன்ற விஷயங்களில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

3 இ. ஆன்மீகம், சமூகம், ராஷ்ட்ரம், தர்மம், கலை,
ஆரோக்கியம் போன்றவை 
சம்பந்தமான தகவல்களை
சேகரித்தல் மற்றும் அத்தகவல்களை மக்களிடம் 
கொண்டு சேர்த்தல்

பராத்பர குரு டாக்டர் இன்றுவரை பல்வேறு விஷயங்களைப் பற்றி விரிவாக படித்துள்ளார். பராத்பர குரு டாக்டர் அவர்களின் படித்தல் சர்வ சாதாரணமானவர்களைப் போன்று ‘படித்து முடித்து விட்டு விடுதல்’ இல்லை. அவர் பொழுதுபோக்கு விஷயங்களை என்றும் படித்ததில்லை. அவர் ஆன்மீகம், சமூகம், ராஷ்ட்ரம், தர்மம், கலை, ஆரோக்கியம் போன்ற சமூகத்திற்கு உபயோகமான விஷயங்களைப் படித்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் அவர் படிக்கும்போது கையில் பேனா வைத்து குறிப்பு எடுத்துக் கொண்டே படிப்பார். அவ்வாறு குறிப்பெடுத்தவற்றை கத்தரித்து ஒரு கோப்பில் சேகரித்து வைப்பார். அவர் அவ்வாறு சேகரித்து வைத்துள்ள விஷயங்களில் வெறும் தினசரிகளிலிருந்து கத்தரித்த காகிதங்கள் மட்டுமே 25 பெட்டிகளை நிரப்பும் அளவிற்கு சேர்ந்துள்ளன. இவ்வாறு அவர் தேர்ந்தெடுத்த விஷயங்களை தலைப்பிற்கேற்றவாறு பாகுபாடு செய்துள்ளார். அவர் வெறும் தர்மம் மற்றும் ஆன்மீகத்தில் மட்டுமல்லாது மனிதகுலத்துடன் சம்பந்தமுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அளவு விஷயங்களை பாகுபாடு செய்து சேமித்து வைத்துள்ளார். பராத்பர குரு டாக்டர் தொகுத்து வைத்துள்ள இந்த விஷயங்களின் பரிமாணத்தைப் பார்த்து, ‘அவர் இதற்காக எவ்வளவு அரும்பாடுபட்டுள்ளார்’ என்பது புரிய வரும் மற்றும் நன்றியுணர்வு பெருகும்!

பராத்பர குரு டாக்டர் சில பத்தாண்டுகள் செய்த பெரும் முயற்சியால் இன்று ‘ஸனாதன் பிரபாத்’ பத்திரிக்காக பல கட்டுரைகள் சுலபமாக குறைந்த நேரத்திற்குள் தயாரிக்க முடிகிறது. ஸனாதனின் நூல் நிர்மாண காரியங்களிலும் இந்த விஷயங்கள் பல இடங்களில் உபயோகமாகின்றன. இந்த ஞானத்தை ஆதாரமாகக் கொண்டே ‘ஸனாதன் அத்யயன் கேந்திரா’ செயல்படுகிறது.

தர்மபோதனை தரும் சிடிக்களும் இக்கட்டுரைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதிலிருந்து ஒவ்வொரு விஷயம் சம்பந்தமான ஞானம் கிடைப்பதற்கும் அது மேலே இந்த சமூகத்தை சென்று அடைவதற்கும் பராத்பர குரு டாக்டரிடம் எவ்வளவு ஆழ்ந்த ஆர்வம் இருந்தது என்பது கவனத்திற்கு வருகிறது.

3 ஈ. சமூகம், ராஷ்ட்ரம் மற்றும் தர்மத்தின் மீது இழைக்கப்படும்
அநீதிகளை எதிர்த்து எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வுடன் இருத்தல்

பராத்பர குரு டாக்டர் அவர்கள் படிப்பதில் பல்வேறு விஷயங்கள் வருகின்றன. அவற்றில் சில விஷயங்களைப் பற்றி அவருக்குத் தெரியாததால் அது சம்பந்தமாக அவர் ஆர்வத்துடன் மற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். இதில் சட்டத்தின் அர்த்தம், அரசாங்க செயல்முறை பற்றிய தகவல்களும் அடக்கம்.

1. ஒருமுறை மகாபலேஷ்வர் பற்றி அவர் படித்ததில் ‘பாக்தாதி பாயிண்ட்’ பற்றி ஒரு குறிப்பு வந்தது. அச்சமயம் அவர் ‘இந்த இடத்திற்கு பாக்தாதி பாயிண்ட்’ என்ற பெயர் எவ்வாறு வந்தது?’ என்பது பற்றிக் கேட்டறிந்தார்.

2. ஆச்ரமத்திற்கு எதிரிலுள்ள தெருவில் அரசு போட்டிருந்த தெருவிளக்குகள் காலை வெளிச்சம் வந்தபிறகும் எரிந்து வந்தன. அதன் மூலம் மின்சக்தி வீணாகிறது என்பது கவனத்திற்கு வந்தவுடன் அவர், ‘மின்விளக்கு காலை எந்த நேரத்திற்குள் அணைக்கப்பட வேண்டும்’ என்பது பற்றிய அரசுஆணை பற்றிய தகவலைப் பெறுமாறு கூறினார். அந்தத் தகவல் கிடைத்தவுடன் ‘அது அரசாங்கத்தின் அக்கறையின்மை மற்றும் நிர்வாகக் கோளாறினால் ஏற்பட்ட தவறு’ என்பது புரிய வந்தது. அப்பொழுது பராத்பர குரு டாக்டர் ‘இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரையை எழுதுங்கள்’ எனக் கூறினார்.

3. ‘தெருவிளக்கு கம்பத்தில் விளக்கைப் பொருத்தும் வழிமுறை தவறானது மற்றும் விளக்கை எந்தக் கோணத்தில் பொருத்தினால் அதிக வெளிச்சம் கிடைக்கும் அத்துடன் மின்சக்தியும் சேமிக்கப்படும்’, என்பதை பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் வரைபடம் வரைந்து விஞ்ஞான முறையில் விளக்கி அதை தினசரி நாளிதழில் பதிப்பிட செய்தார்.

4. ஜில்லா, மாநிலம் மற்றும் தேசீய பொதுவழி சாலைகளில் போடப்பட்டிருந்த குறிப்பு அட்டைகள், இரு குறிப்பு அட்டைகளில் காணப்படும் வேறுபாடுகள், அவற்றை வைக்கப்பட்டிருந்த வழிமுறை, சாலைகளில் கண்ணாடி பொருத்துவது பற்றிய தீர்மானம் போன்ற பல விஷயங்களைப் பற்றி அவர் தெரிந்து கொண்டு அதில் காணப்படும் தவறுகளைத் தெரிந்து கொண்டு அது சம்பந்தமாக ‘ஸனாதன் பிரபாத்’தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகளை வெளியிட்டார்.

 

4.ஸாதகர்களின் செயல்திறன்
மற்றும் ஆன்மீக முன்னேற்ற கண்ணோட்டத்தில்
அவர்களை வழிநடத்தும் ஆன்மீக தலைமை வகிக்கும் திறன்!

4அ. ஒவ்வொரு ஸாதகரும் சேவையின் அடுத்த
நிலைக்கு முன்னேற தனிப்பட்ட வழிகாட்டுதல் வழங்குதல்

நூல் தொகுப்பு, வாராந்திர ஸனாதன் பிரபாத் பத்திரிக்கை தொகுப்பு ஆசிரியர் பொறுப்பு, ஆச்ரம நிர்வாகம், ஆன்மீக பிரசாரத்திற்காக பயணம் செய்தல் போன்ற மகத்துவபூர்வமான சேவைகளை ஆரம்பத்தில் பராத்பர குரு டாக்டர் ஆடவலே தானே செய்து வந்தார். பின்பு ஸாதகர்கள் வந்து சேர சேர, அவர்களுக்கு இந்த சேவைகளைப் பற்றிக் கற்றுத் தந்தார். ஸன்ஸ்தாவின் பல ஸாதகர்கள், பல்வேறு வகைப்பட்ட சேவைகளை தாங்களே கற்றுக் கொண்டுள்ளனர்.

சேவைகளை கற்று வரும் ஸாதகர்களுக்கு, அந்த சேவையைப் பற்றிய விவரங்களை அவ்வப்பொழுது கேட்டறிதல், அவர்கள் எங்கு தவறு செய்கிறார்கள் என்பதைக் கண்டறிவது போன்றவற்றை தானே செய்து வந்தார். அதன் பலனாக பல ஸாதகர்கள் உருவானார்கள். பின்பு மகான்களின்ஆடைகளை எவ்வாறு இஸ்திரி செய்வது, சுத்தம் செய்யும்போது துடைப்பத்தை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்துவது, வாய் கொப்பளிக்கும்போது எவ்வாறு சிறிதளவே நீரை உபயோகிப்பது போன்ற சிறு சிறு விஷயங்களையும் சரியான முறையில் எவ்வாறு செய்வது என்பது பற்றி தானே ஸாதகர்களுக்குக் கற்றுத் தந்தார்.

4ஆ. ஸாதகர்களின் ஆன்மீக
முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தருதல்

பராத்பர குரு டாக்டர் அவர்கள் ஸாதகர்களின் மூலமாக வெறும் சேவை மட்டுமே செய்விக்கவில்லை, மாறாக ‘ஸனாதன் வழிகாட்டுதலின்படி ஸாதனை  ய்யும் ஒவ்வொரு ஸாதகரின் ஆன்மீக முன்னேற்றம் நடக்க வேண்டும்’ என்ற கண்ணோட்டத்தையும் வழங்கினார். அதன்படி யாராவது ஒரு ஸாதகரின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தால் அவர் செய்யக்கூடிய சேவைகளை நிறுத்தி விட்டு அவரை வ்யஷ்டி ஸாதனையில் கவனம் செலுத்தும்படி செய்தார். ஸாதகர்களின் ஆன்மீக முன்னேற்றத்துடன் ஒப்பிடும்போது ஸனாதனின் காரியங்கள் நடப்பது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தினார். இதை பல ஸாதகர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.

 

5.தன் ஸ்தாபனம் பிறரின் ஸ்தாபனம் என்ற
பேத உணர்வை விட்டொழித்து ஹிந்துத்வவாதிகளுக்கு
உதவி புரிதல் மற்றும் ஹிந்து ஒற்றுமைக்காக பாடுபடுதல்

பல வருடங்களுக்கு முன்பாக ஸாதகர்களுக்கு போதனை வழங்குவதற்காக பராத்பர குரு டாக்டர் அவர்கள் நான்கு வரிகள் கொண்ட ஒரு கவிதையைப் புனைந்தார். ‘நான் ஸ்தூல தேஹத்தில் எல்லா இடங்களிலும் எப்போதும் இருப்பது சாத்தியமில்லை என்பதால் ‘ஸனாதன தர்ம’ ரூபத்தில் நான் எங்கும் எப்பொழுதும் உள்ளேன்’ என்ற உணர்வைக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். காலப்போக்கில் ஹிந்துத்வ காரியங்கள் அதிகரித்துக் கொண்டே வரும்போது பல ஹிந்துத்வவாதிகள் பராத்பர குரு டாக்டர் அவர்களிடம் ஆகர்ஷிக்கப்பட்டு அவரை தங்களின் குரு ஸ்தானத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர். இன்று பலருக்கு பராத்பர குரு டாக்டர் ‘ஸனாதன தர்மத்தின் ரூபமாக’ விளங்குகிறார். பராத்பர குரு டாக்டர் அவர்கள், தன் ஸ்தாபனம் மற்றவரின் ஸ்தாபனம் என்ற பேத உணர்வை எப்பொழுதும் கொள்ளவில்லை. அதனால் ஹிந்துத்வவாதிகளும் ஸாதகர்களைப் போன்றே அவரிடம் வழிகாட்டுதல் பெற்றனர். அதனால் பல ஹிந்துத்வவாதிகள் இன்று ஹிந்துத்வ காரியங்களிலும் ஈடுபட்டுக் கொண்டு இறைவனை நோக்கியும் முன்னேறி வருகின்றனர். இதற்கு பல நேரிடையான உதாரணங்களைப் பார்க்க முடியும்.

5அ. ‘ஸனாதன் பிரபாத்’ பத்திரிக்கை
உங்களுடையது’, என்று ஹிந்துத்வ பற்று உள்ளவரிடம் கூறுதல்

‘ஸனாதன் பிரபாத்’ என்பது ‘ஸனாதன் ஸன்ஸ்தா’வின் பத்திரிக்கை’, என்று சமூகம் கருதுகிறது; ஆனால் பராத்பர குரு டாக்டர் மட்டும் ‘ஸனாதன் பிரபாத் ‘எல்லா ஹிந்துத்வவாதிகளின் முகபத்திரிக்கை’ என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும்’, என்ற வழிகாட்டுதலை ஸாதகர்களுக்கு வழங்கியுள்ளார்.

அவரை சந்திக்கும் ஒவ்வொரு ஹிந்து பற்றுள்ளவரிடமும் அவர் கூறுவார், ‘ஸனாதன் பிரபாத் உங்களுடையது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! ஆகையால் உங்கள் ஸ்தாபனத்தின் நிகழ்ச்சிகளின் செய்திகளை ‘ஸனாதன் பிரபாத்’தில் வெளியிட அனுப்புங்கள்!’ ஹிந்து பற்றுடைய ஸ்தாபனங்களின் எண்ணற்ற வாசகர்களைக் கொண்ட HinduJagruti.org என்ற வலைதளத்திலும் பல்வேறு ஸ்தாபன நிகழ்ச்சிகளின் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றிலும் ‘ஹிந்துத்வவாதிகள் செய்து வரும் அனைத்து காரியங்களில் நம்முடைய சிறிய பங்கு’, என்ற கண்ணோட்டத்தை பராத்பர குரு டாக்டர் அவர்கள் வழங்கியுள்ளார்.

5ஆ. ஹிந்துத்வவாதிகளை ‘குடும்ப அங்கத்தினர்’ போன்று விசாரித்தல்

பராத்பர குரு டாக்டர் அவர்கள் ஹிந்துத்வவாதிகளிடம் ‘குடும்ப அங்கத்தினர்’ என்ற உணர்வுடன் விசாரிப்பார். இதற்கு பல உதாரணங்களைத் தர முடியும்.

1. யாராவது ஒரு ஹிந்துத்வவாதி ராஷ்ட்ரம் மற்றும் தர்மம் சம்பந்தமாக சிறப்பாக காரியங்களில் ஈடுபட்டால் அவர்களிடம் பாராட்டு தெரிவிக்குமாறு ஸாதகர்களிடம் கூறுவார்.

2. யாராவது ஒரு ஸாதகரை சந்திக்கும்போது அந்த ஸாதகர் வசிக்கும் இடத்திலுள்ள மற்ற ஹிந்துத்வவாதிகளைப் பற்றியும் ஆர்வத்துடன் விசாரிப்பார்.

3. ‘மரணப் படுக்கையில் இருக்கும் சில ஹிந்துத்வவாதிகளின் மரணப்பிரவேசம் சுலபமாக இருக்க வேண்டும்’, என்பதற்காக அவர்களுக்கு ஆன்மீக உபாயத்தைப் பற்றி கூறுவார்.

4. அவர் குடும்பத்தின் நெருங்கிய உறுப்பினரைப் போன்று ஹிந்துத்வவாதிகளிடம் எல்லா விஷயங்களைப் பற்றியும் விசாரிப்பார் மற்றும் அவசியத்திற்கேற்றபடி உதவி செய்வார்.

5 இ. சிறிய ஸ்தாபனத்தின் காரியங்கள்
விரிவடைய அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி உதவி புரிதல்

ஹிந்துத்வவாதிகளை ஒருங்கிணைக்கும் பணியில் சில சிறிய ஸ்தாபனங்களும் அறிமுகமாகின்றன. இந்த ஸ்தாபனங்களின் பொறுப்பாளர்களுக்கு ஹிந்துத்வ காரியங்களை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஆனால் ‘காரியங்களின் திசை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் ஒற்றுமையை எவ்வாறு வளர்ப்பது?’ என்பது பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை. பராத்பர குரு டாக்டர் இது போன்ற ஸ்தாபனங்களின் பொறுப்பாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் சில நிகழ்ச்சிகளை அவர்களின் தலைமையில் நடத்துமாறு வழிகாட்டுதல் வழங்கினார்.

அதேபோல் அவர்களுக்கு ‘காரியங்களை எவ்வாறு செவ்வனே நிறைவேற்ற வேண்டும்’ என்பது பற்றிய பயிற்சி அளிப்பதற்கு பல்வேறு வழிகளைப் பரிந்துரைத்தார். இதில் சில பொறுப்பாளர்களுக்கு ஆச்ரம நிர்வாகம் பற்றிக் கற்றுக்

கொடுக்க அவர்களை ஸனாதன் ஆச்ரமத்திற்கு வரும்படி அழைத்தார். அதோடு சில ஹிந்துத்வவாதிகளை ‘ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி’யின் காரியகர்த்தாக்களுடன் சில நாட்கள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி ‘அவர்கள் ஹிந்து ஒற்றுமை காரியங்களை எவ்வாறு செய்கின்றனர்’ என்பதைக் கற்றுக் கொள்ளும்படி சொன்னார்.

5ஈ. ஹிந்து ஸ்தாபனத்தின் இரு
தலைவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது
அதைத் தீர்த்து வைப்பதற்கு ஸாதகர்கள் முயல வேண்டும் என்று கூறினார்

ஹிந்துத்வ ஸ்தாபனங்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகள் ஹிந்து ஒற்றுமைக்கு பாதகமாக உள்ளது. அதனால் ‘ஹிந்துத்வவாதிகள் சம சிந்தனை விஷயங்களுக்காக ஒருங்கிணைந்து தர்மரக்ஷன காரியத்தில் ஈடுபட வேண்டும்’, என்று பராத்பர குரு டாக்டர் அடிக்கடி கூறுவார்.

 

6.மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக குணங்களின் சங்கமம்

இதுவரை பராத்பர குரு டாக்டர் அவர்களின் குணங்களில் முக்கியமாக மானசீக மற்றும் புத்தி நிலையில் உள்ள குணங்களை மட்டுமே பார்த்தோம். ஆனால் அவரின் செயல்பாடுகள் மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக சக்தியாகும் என்பதை வெளிக்காண்பிக்கும் அவரின் சில குண சிறப்புகளைப் பார்க்கலாம்.

6 அ. சூட்சுமத்தை அறியும் சக்தி

ஸ்தூல பஞ்சஞானேந்த்ரியங்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டதே ‘சூட்சுமம்’; பஞ்சஞானேந்த்ரியங்கள், மனம் மற்றும் புத்திக்கு அப்பாற்பட்ட ஞானமே ‘சூட்சும ஞானம்’ ஆகும். பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள், வருடம் 1982 முதல் சூட்சும ஞானம் சம்பந்தமாக ஆய்வு செய்து வருகிறார். 15.7.1982 முதல் அதாவது ஸாதனை செய்ய ஆரம்பித்தது முதல் அவரால் சூட்சுமத்தை அறிய முடிந்தது. ஆரம்பத்தில் அவருக்கு ஏதாவது ஒரு விஷயம் அல்லது செயல்பாடு பற்றி ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதிலை சூட்சுமத்தில் பெற முடிந்தது. ஸாதனை செய்ய ஆரம்பித்த பின்னர் அவருக்கு இந்த பதிலின் காரணகாரியபாவம் புரிய ஆரம்பித்தது. அவர், தானாகவே சூட்சும ஞானேந்த்ரியங்கள் விழிப்படைந்த ஸாதகர்களுக்கு ‘சூட்சுமத்தில் ஞானத்தைப் பெறுவது, சூட்சும பரீட்சை செய்வது, சூட்சும சித்திரங்களை வரைவது’ போன்ற செயல்களை கற்றுத் தந்தார்.

6 ஆ. அவர் இருப்பால் காரியங்கள் நடத்தல்

சூரியன் உதித்த பின்னர், மலர்கள் தானே மலர்கின்றன, மக்கள் விழித்துக் கொள்கின்றனர். அதேபோல் மகான்களின் இருப்பால் மட்டுமே காரியங்கள் தானே நடக்கின்றன. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் இருப்பால் நடக்கும் காரியங்களின் பட்டியலை இப்பொழுது பார்ப்போம்.

1. தீய சக்திகளின் பாதிப்பு உடையவர்களின் ஆன்மீக கஷ்டம் குறைதல்

2. அவரின் இருப்பால் ஸாதகர்களின் மீது ஆன்மீக உபாயம் நடத்தல், அதாவது ஸாதகர்களால் சைதன்யம் க்ரஹிக்கப்பட்டு அவர்கள் சேவை செய்வதற்கான நேர்மறை சக்தி உண்டாதல்.

3. அவரின் இருப்பால் ஸாதகர்களின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுதல்

4. வருடம் 2007 முதல் உடல்நிலை சரியில்லாததால் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் எங்கும் செல்ல முடிவதில்லை, இருந்தாலும் அவரின் வெறும் இருப்பால் நாளுக்கு நாள் ஸனாதனின் காரியங்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றது.

 

7.பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின்
தெய்வீக குணங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் போதனை

பராத்பர குரு டாக்டரிடம் காணப்படும் குணங்கள் அவர் தொடர்ந்து முயற்சி செய்ததால் கிடைத்தவை ஆகும். அவரை ஆதர்சமாகக் கொண்டு நாமும் அது போன்ற குணங்கள் நம்மிடம் நிர்மாணமாவதற்கு முயற்சி செய்ய வேண்டும்; அதன் மூலம் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும், அத்துடன் நம் மூலமாக ராஷ்ட்ரம் மற்றும் தர்ம நலன் சம்பந்தமான காரியங்கள் நடக்க வேண்டும்.

நாம் இக்குணங்கள் நம்முள் ஏற்பட சங்கல்பம் செய்து கொள்வோம், அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்! நமக்கு உன்னதமான குணகுரு கிடைத்ததால் நம் மூலமாக ஸ்ரீகுரு எதிர்பார்க்கும்படியான ஸாதனை மற்றும் குருகாரியங்கள் ஆகிய இரண்டும் நடந்து நம்முடைய முன்னேற்றம் ஏற்படப் போகின்றது. அதற்கு அவர் சரணங்களில் ஆழ்ந்த பக்தி உணர்வுடன் பிரார்த்தனை செய்வோம்.

‘ஹே ஸர்வ குணங்களின் இருப்பிடமான குருதேவா, உங்களின் குணங்கள் எல்லா ஸாதகர்களிடமும் ஏற்பட எங்களின் மூலமாக கடினமான ச்ரத்தையுடன் கூடிய முயற்சிகளை நடத்தி வைப்பாயாக! இந்த ஈச்வர குணங்கள் எமக்குள் ஏற்பட தேவையான சக்தி, புத்தி மற்றும் பக்தி ஆகியவற்றை நீங்களே எங்களுக்கு தந்தருளுங்கள்! ஹே குருதேவா, நீங்கள் எதிர்பார்க்கும்படியான ஆதர்ச ஸாதகராக, ஆதர்ச சிஷ்யனாக மாறுவதற்கு உரிய தகுதியை நீங்கள்தான் தந்தருள வேண்டும்.

எங்களிடமுள்ள ஆறு பகைவர்களை தூர விலக்குவதற்கு மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்படி செய்யுங்கள். எங்களை தூய்மையாக்கி நிர்மலமாக்கி உங்களின் சரண கமலங்களில் நிரந்தர ஸ்தானத்தை தந்தருளுங்கள். இதுவே உங்களின் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை!’

Leave a Comment