‘மகாயோக பீடமாக’ விளங்கும் பண்டரிபுரத்தில் ‘ஆனந்தத்தை அள்ளித் தரும் வள்ளலான’ பாண்டுரங்கனின் இருப்பு!

விட்டல் பக்தர்களுக்கு மகாவிழாவாக விளங்கும் ‘பண்டரீசி வாரி’!

பண்டரிபுரம், மகான்களின் தாய்வீடு. மகாராஷ்ட்ராவிலும் மற்றும் பல இடங்களிலுள்ள சாது ஸந்த மகான்களின் தாய்வீடாக விளங்கும் பண்டரிபுர பாண்டுரங்கன் மீது மகான்களுக்கு அபார பக்தி உண்டு. இந்த ஸந்த் மண்டலி ஆடி சுக்லபக்ஷ ஏகாதசி முதல் ஆரம்பமாகும் சாதுர்மாசத்தில் ஆடி ஏகாதசி மற்றும் கார்த்திகை ஏகாதசி ஆகிய திதிகளில் பண்டரிபுர யாத்திரை மேற்கொள்கின்றனர். (எதை மேற்கொண்டால் மனிதனின் மூன்று வித தாபங்கள் தொலையுமோ அதுவே ‘யாத்திரை’ ஆகிறது.) அவர்கள் இந்த யாத்திரையை ‘வாரி’ என அழைக்கின்றனர். இன்றும் பாண்டுரங்கனின் தரிசனத்திற்காக பக்தர்கள் மிருதங்க தாள சகிதமாக மகான்களின் அபங்குகளை, பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு பாண்டுரங்கனின், விட்டலனின் நாமசாகரத்தில் மூழ்கி கால்நடையாக பண்டரிபுர யாத்திரையை மேற்கொள்கின்றனர். இந்த பக்தர்கள் ‘வாரகரி’ என அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாரி என்பது மகாகோலாகல விழாவாகும்.

‘மகாயோக பீடமாக’ உள்ள பண்டரிபுரம்!

‘புண்டலீகனை சந்திப்பதற்கு பரபிரம்மனே இறங்கி வரவில்லையா!’ புண்டலீகனின் பக்தி உணர்வால் பாண்டுரங்கன் பண்டரிபுரத்திற்கு வந்து எல்லோரையும் உத்தாரணம் செய்ய இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிற்கின்றான். புண்டலீகனால் பண்டரிபுரத்திற்கே மகத்துவம் கிடைத்துள்ளது, அது புண்ணிய பூமியானது. (பகவான் அதிக மாசத்திற்கு (13-வது மாசம்) ‘புருஷோத்தம மாசம்’ என்ற ஸ்தானத்தைக் கொடுத்து அதனை உயர்த்தியுள்ளான்.) பகவான் புண்டலீகனை முன்னிட்டு பண்டரிபுரம் வந்து அவனுக்கு தரிசனம் தந்தருளினான். ‘பகவானின் தரிசனம் கிடைப்பது’ என்பது யோகமென்றால் ‘பகவான் தானே வந்து தரிசனம் தந்தருளுவது’ என்பது ‘மகாயோகம்’ ஆகும். புண்டலீகனை சந்திப்பதற்காக பகவான் தானே பண்டரிபுரம் வந்ததால் ஆதி சங்கராச்சாரியார் பண்டரிபுரத்தை ‘மகாயோக பீடம்’ எனக் கூறியுள்ளார்.

பாண்டுரங்கனின் கோவில் – ‘ரமாமந்திர்’

ஆதி சங்கராச்சாரியார் கூறுகிறார், ‘பாண்டுரங்கனின் கோவில் ‘ரமாமந்திர்’ ஆகும், அதாவது ‘லக்ஷ்மியின் மந்திரம்’. ‘லக்ஷ்மி’ என்றால் சுவர்ணமய காந்தி உடையவள் என்று அர்த்தம். நாம் லக்ஷ்மி என்றால் வெறும் பணம் என நினைக்கிறோம். இந்த உடல் வெறும் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. ஜீவன் ஸாதனையின் மூலமாக ஆத்மாவின் (இறைவனின்) ஆறு குணங்களை தனக்குள் கொண்டு வரும்போது அங்கு பாக்யலக்ஷ்மி உங்களின் குண சிறப்புகளை வெளிப்பட செய்கிறாள். அப்பொழுதே அந்த ஜீவன் பகவானின் அருளால் தேஜஸ் நிறைந்ததாக ஆகிறது.

பாண்டுரங்கனின் அருகில் ஸ்ரீலக்ஷ்மியின் வாசம்

‘பாண்டுரங்கனின் அருகில் ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள்’ என்று கூறப்படுகிறது. லக்ஷ்மி ரூபமான மாயா பாண்டுரங்கனின் அருகில் இருந்து சேவை செய்கிறாள் என்றால் தாஸ்ய உணர்வுடன் தன்னுள்ளே உள்ள ஆத்மஸ்வரூபத்திற்கு சேவை செய்கிறாள் என்று அர்த்தம். அதனாலேயே ‘உடலே பண்டரிபுரம், ஆத்மாவே விட்டல்’ என கூறப்படுகிறது.

லக்ஷ்மி என்றா ‘லக்ஷ’ + ‘மி’, அதாவது பாண்டுரங்கனிடம் லக்ஷியமுள்ள பக்தனைக் குறிக்கிறது. எப்பொழுதும் ஆத்மஸ்வரூபத்தில் லயித்திருப்பவரைக் குறிக்கிறது. அதனால் ஸ்ரீமத் ஆதி சங்கராச்சாரியார் கூறுகிறார், ‘அத்தகைய பாண்டுரங்கனை நான் நமஸ்கரிக்கிறேன்’.

தாமரை மலரை ஒத்து எல்லோரின் வாழ்விலும்
சுகந்தத்தைப் பரப்பும் பாண்டுரங்கனின் அன்பான கடைக்கண் பார்வை!

‘பாண்டுரங்கனின் கண்கள் தாமரையை ஒத்திருக்கின்றன’ என கூறப்படுகிறது. தாமரை சேற்றில் பிறக்கிறது, பிறகு தண்ணீரிலிருந்து மேலெழும்பி ஆகாயத்தை நோக்கி வளர்கிறது. தண்ணீரிலுள்ள தாமரை மலரால் சுற்றுப்புற சூழல் சுகந்தத்தாலும் சந்தோஷத்தாலும் நிரம்புகிறது. தாமரை இலை தண்ணீரில் இருந்தாலும் அது தண்ணீரைத் தன் மேல் ஒட்ட விடுவதில்லை. இவ்வாறாக தாமரையின் வாழ்வு உன்னதமாக உள்ளது. அதேபோல் பகவானின் கடைக்கண் பார்வை யார் மீது விழுகிறதோ அவர்களின் வாழ்வு உன்னதமாகி மலர்கிறது. பகவானுக்கு தாமரை மிகவும் பிரியம் என்பதால் பகவானின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றிக் கூறும்போது தாமரையை முதலில் கூறி பின்பு பகவானின் அங்கம் கூறப்படுகிறது, உதாரணத்திற்கு கமலநேத்ரா, கமலநயனா, கமலாகரா, பத்மாகரா போன்றவை.

சந்திர கிரணத்தைப் போல் ஓடும் சந்திரபாகா நதி!

பண்டரிபுரத்திலுள்ள சந்திரபாகா நதி, பீமாசங்கர மலையிலிருந்து உற்பத்தி ஆவதால் அதற்கு ‘பீமா’ என்ற பெயரும் உண்டு. இந்த பீமா நதி பண்டரிபுரத்தின் மாண்ட் பாறை வழியாக விஷ்ணுபத் ஸ்தானம் வரை சந்திர கிரணத்தைப் போல் பாய்வதால் அதற்கு ‘சந்திரபாகா’ என்ற பெயர் ஏற்பட்டது. பின்பு அது கர்நாடகாவில் கிருஷ்ணா நதியில் போய் கலக்கிறது. இந்த சந்திரபாகா நதிக்கருகில் ‘லோஹதீர்த்தம்’ என்ற பவித்ர ஸ்தானம் உள்ளது.’

வாரகரிகளின் கைகளில் உள்ள காவிக்கொடி!

 

வாரகரிகளின் கைகளில் உள்ள காவிக்கொடியின் இரு நுனிகள் ஸத்வ குணத்தைக் குறிக்கிறது. ஸத்வகுணம் விடுபட்டு இருந்தாலும் அதனால் எவ்வித தவறும் ஏற்படுவதில்லை; ஆனால் ரஜ மற்றும் தம குணங்கள் தவறுகளை ஏற்படுத்தும் என்பதால் அவை யம-நியமங்களால் கட்டிப் போடப்பட்டுள்ளன. இல்லையேல் பாண்டுரங்க தரிசனத்தில் (இறைவனை அடையும் லக்ஷியத்தில்) அவை தடங்கல்களை ஏற்படுத்தக் கூடும். அதனால் அவற்றை கட்டையில் கட்டியுள்ளனர். ஸத்வகுணத்தை சுதந்திரமாக விட்டுவிட்டு ரஜ-தம குணங்களைக் கட்டிப்போட்டு வாரகரிகள் பண்டரிபுரத்திற்கு செல்கின்றனர்.

வருடம் முழுவதும் நீடிக்கும் ஆனந்தத்தைத் தரும் திறன் வாரிக்கு உண்டு என்று வாரகரிகள் உணர்தல்!

‘மகாராஷ்ட்ராவில் கானாகொபர்யாவிலிருந்தும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் வருடா வருடம் லக்ஷக்கணக்கான வாரகரி ஆடி மற்றும் கார்த்திகை ஏகாதசி அன்று பண்டரிபுர பாண்டுரங்கனின் தரிசனத்திற்காக வருகிறார்கள். அவர்கள் ஹரிநாமத்தை முழங்கியவாறு, மிருதங்க தாள வாத்தியத்தை வாசித்து ஏறக்குறைய 322 கி.மீ. நடந்து வருகிறார்கள். அந்த சமயம் அவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை, எதைப் பற்றியும் கவலைப்படுவதும் இல்லை! அவர்களுக்கு இத்தகைய உற்சாகம் பாண்டுரங்கனிடம் கொண்டுள்ள அபரிமிதமான ச்ரத்தையால் கிடைக்கிறது. சமூகத்தின் எல்லா வகையினரும் பெண்கள், வயதானவர், குழந்தைகள், இளைஞர்கள் உட்பட அனைவரும் தங்களின் தீராத ஆசையால் இந்த பக்திபிரவாஹத்தில் பங்கேற்கின்றனர். இது ஆன்மீக உணர்வின் அடையாளம். வாழ்வை நோக்கும் ஒரு தனித்துவ பார்வை. வாரகரிகளுக்கு வருடம் முழுவதும் நிரம்பியிருக்கக் கூடிய ஆனந்தத்தைத் தரும் சக்தி கொண்டது இந்த வாரி.’

– (பராத்பர குரு) பாண்டே மகாராஜ்

தகவல் : ஸனாதனின் நூல் ‘பண்டரீசா பஹிலா வாரகரீ (பாண்டுரங்க)

Leave a Comment