குருபூர்ணிமா என்பது பரபிரம்ம ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணனின் ஆதிசக்தியின் பூஜை !

1. குருபூர்ணிமா என்பது சைதன்யத்தின் குருபூர்ணிமா
ஆனதால் உங்களுக்குள் சைதன்யத்தை விழிப்படைய செய்து சேவை செய்யுங்கள்!

சைதன்யம் எங்கும் நிறைந்துள்ளது மற்றும் அதுவே குரு ஸ்வரூபத்தில் செயல்படுகிறது. குருபூர்ணிமா என்பது அதனின் காரியம் அதுவே நடத்திக் கொள்ளப் போகிறது. நாம் வெறும் பார்வையாளர்களே. அதனால் இது சைதன்யத்தின் குருபூர்ணிமா என்பதை உணர்ந்து கொண்டு உங்களிடமுள்ள சைதன்யத்தை விழிப்படைய செய்து சேவை செய்ய வேண்டும்.

 

2. நமக்குள் உறைந்துள்ள ஆதிசக்தியின் ஸ்வரூபத்தை
உணர்ந்து அதைப் போற்றுங்கள் மற்றும் விழிப்படைய செய்யுங்கள்!

நீங்கள் தற்காப்பு பயிற்சி வகுப்பு சமயத்தில் ‘ஆதிசக்தி தூ அந்தசக்தி தூ ஜகஜ்ஜனனி தூ லயகாரி தூ’ என்ற சக்தி ஸ்தோத்திரத்தைப் பாடுகிறீர்கள். அவ்வாறு பாடும்போது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் அந்தர்யாமியாய் உள்ள ஆதிசக்தியை ஆவாஹனம் செய்ய வேண்டும். அதை விழிப்படைய செய்து காரியங்களை செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் வெளிமுகமாகி அந்த சக்தியை வெளியில் தேடினால் அல்லது வெளியில் உள்ள சக்தியில் ஆதிசக்தியைத் தேட முயற்சித்தால் அதனால் ஆவது ஒன்றுமில்லை.

இந்த சக்தி என்னுடையது. அது விழிப்படைந்து காரியங்களை செய்விக்கப் போகிறது என்பதை மனதில் பதிய வைப்பதற்கான ஸ்தோத்திரம் இது. இதை உணர்ந்து ஸ்தோத்திரம் செய்வதற்கும், சக்தி என்பது வெளியில் உள்ளது என்று எண்ணி ஸ்தோத்திரம் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. ஆதிசக்தியை வெளியில் பார்க்க முயற்சித்தால் நாம் ஆதிசக்தியிடமிருந்து தொலைவில் இருக்கிறோம் என்றாகிறது, அதாவது வெளியில் பார்க்க முயற்சித்தால் அது நம்மிலிருந்து வேறுபட்ட ஒரு சக்தி, அதை விழிப்படைய முயற்சிக்கிறோம் என்றாகிறது. ஆனால் உண்மையில் நமக்குள் அந்தர்யாமியாய் உறைந்திருக்கும் ஆதிசக்தியை விழிப்படைய செய்து செயல்பட வைக்க வேண்டும்.

 

3. குருபூர்ணிமா அன்று குருவின் ஸ்தானத்தில்
உள்ள ஆதிசக்தியை ஸ்மரித்து பூஜை செய்ய வேண்டும்!

3 அ. பரபிரம்ம ஸ்வரூபமான குருதத்துவத்தின் மகத்துவம்!

குருர்பிரம்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மகேஸ்வர: |
குரு: ஸாக்ஷாத் பரபிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: ||

அர்த்தம் : குருவே பிரம்மா; குருவே எங்கும் நிறைந்துள்ள பகவான் ஸ்ரீவிஷ்ணு மற்றும் குருவே சங்கரன். அதோடு குருவே ஸாக்ஷாத் பரபிரம்மம் ஆவார். அத்தகைய குருவை நான் நமஸ்கரிக்கிறேன்.
பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேசன் ஆகியோர் ஆதிசக்தியின் ரூபங்கள் ஆவர். பரபிரம்மத்திடமிருந்து நிர்மாணமாகியுள்ள பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேசன் ஆகியோர் அம்ச ரூபமாக காரியங்களை செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குருபூர்ணிமா என்பது அத்தகைய பரபிரம்ம ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணனின் ஆதிசக்தியின் பூர்ணிமா ஆகும்.

3 ஆ. குருபூர்ணிமா அன்று செய்யப்படும் குருவின்
பூஜையே ஜகத்குரு ஸ்ரீகிருஷ்ணனுக்கு செய்யப்படும் பூஜையாகும்!

ஈச்வர: பரம: கிருஷ்ணா: ஸச்சிதானந்த விக்ரஹ: |
அனாதிராதிகோவிந்த: ஸர்வகாரணகாரணம் ||

– ஸ்ரீ பிரம்மஸம்ஹிதா, ஸ்லோகம் 1

அர்த்தம் : ஸ்ரீகிருஷ்ணனே பரம ஈச்வரன். அவனின் திருமூர்த்தியே நித்யமானதுவும் ஆனந்த ஸ்வரூபமானதுவும் ஆகும். அவனே அநாதி, அதி உத்தமமானவன், எல்லா காரணங்களுக்கும் காரணமாக விளங்குபவன்.

குருவின் ஸ்தானம் என்பது மூலஸ்வரூபமான கிருஷ்ணனாகும், பிரளயத்திற்கு பிறகும் இருக்கக் கூடியதாகும். அத்தகைய ஜகத்குருவான சக்திக்கு வணக்கம். குருபூர்ணிமா அன்று செய்யப்படும் பூஜை ஸ்ரீகிருஷ்ணனுக்கு செய்யப்படும் பூஜையாகும் என்பதை உணர வேண்டும். குரு, பரபிரம்ம ஸ்வரூபமானதால் அவரின் பூஜையை நாம் பரபிரம்ம ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணனின் பூஜையாக செய்கிறோம்.

3 இ. ஸந்த் ஞானேஷ்வர் மகாராஜும்
மூலஸ்வரூபமான ஆதிசக்தியை முதலில் ஸ்தோத்திரம் செய்துள்ளார் !

ஸந்த் ஞானேஷ்வர் மகாராஜும் ஞானேஷ்வரி எழுதும்போது மூலஸ்வரூபமான அந்த ஆதிசக்தியை முதலில் ஸ்தோத்திரம் செய்துள்ளார். அவர் கூறுகிறார்,

ஓம் நமோஜி ஆத்யா | வேத பிரதிபாத்யா | ஜயஜய ஸ்வஸம்வேத்யா | ஆத்மரூபா ||

– ஞானேஷ்வரி, அத்தியாயம் 1, ஓவி 1

அர்த்தம் : ஓம் என்பதே ஆதிசக்தியின் முதல் ஸ்வரூபமாக இருப்பதால் அதை வேதங்கள் போற்றுகின்றன. அதுவே ஸ்வஸம்வேத்யாவாக ஆத்மஸ்வரூபமாக எங்கும் காரியங்களை நடத்துவிக்கிறது, அத்தகைய ஓம்கார ரூபமான (ஸ்ரீகிருஷ்ண ரூபமான) ஆதிசக்திக்கு நமஸ்காரம்.

3 ஈ. குருபூர்ணிமா அன்று பரம் பூஜ்ய
பக்தராஜ் மகாராஜ் ரூபமான குருவின் சைதன்யத்திற்கு பூஜை செய்யப்படுதல் !

ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரம் பூஜ்ய பக்தராஜ் மகாராஜ் ஸ்ரீகிருஷ்ணனின் ரூபம் ஆவார். நீங்கள் குருபூர்ணிமா சமயத்தில் அவரின் சைதன்ய ரூபமான மகான் சக்திக்கு பூஜை செய்ய வேண்டும். இங்கு இந்த சக்தியின் பெயர் பரம் பூஜ்ய பக்தராஜ் மகாராஜ் என்பதாகும். அதாவது இது குருவின் சைதன்யத்திற்கு செய்யப்படும் பூஜையாகும். சைதன்யம் இல்லாமல் எதுவும் இல்லை.

 

4. குருபூர்ணிமா என்பது சைதன்ய ரூபமான
மூல தத்துவத்தின் பூஜை என்றாலும் மூல ஸ்வரூபத்தை
மறந்தாலும் வெளிமுகப் பார்வை கொண்டு
செயல்படுவதாலும் பல்வேறு சம்ப்ரதாயங்கள், ஜாதிகள் உருவாகியுள்ளன !

குருபூர்ணிமா என்பது சைதன்ய ரூபமான மூல தத்துவத்தின் பூஜையாகும். காரணம் அது எல்லா அசையும்-அசையாப் பொருட்களின் ரூபத்தில் செயல்படுவதால் நாம் அதை உணர்ந்து கொள்வதற்கு அதன் ஸ்வரூபத்தை ஒத்த பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. உண்மையில் ஆதிசக்தியின் குருரூபம் எங்கும் ஒன்றேயாக உள்ளது. அதன் மூல ஸ்வரூபத்தை மறந்ததாலும் வெளிமுகப் பார்வை கொண்டு பார்ப்பதாலும் பல்வேறு சம்ப்ரதாயங்கள், ஜாதிகள் போன்றவை தோன்றியுள்ளன. அதனால் பேதங்களும் உருவாகியுள்ளன. பேதத்தால் இன்று ஹிந்து தர்மத்தின் மகான் சக்தி குறைந்து பிளவுபட்டு நிற்கிறது. அதனால் தர்மசக்திக்கு தீங்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெளிப்புற ஸன்ஸ்காரத்தை இல்லாமல் அழித்து மூல சக்தியை மறுபடியும் வெளிப்பட வைத்து ஒருமுகமாக காரியங்களை செய்ய வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

 

5. குருவே ஆதிசக்தியின் ஸகுண ஸ்வரூபமானதாலும் பெரும்
ஆற்றல் கொண்டுள்ளதாலும் சிஷ்யனுக்கு தெய்வத்வத்தை வழங்க வல்லது !

குருவே ஆதிசக்தியின் ஸகுண ஸ்வரூபமானதாலும் அதற்கு அளப்பரிய ஆற்றல் இருப்பதாலும் சிஷ்யனுக்கு ஈச்வர பதத்தை வழங்க வல்லது. உங்களுள் உறைந்திருக்கும் ஆதிசக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல் குருதத்துவத்திற்கு மட்டுமே உண்டு. அந்த சக்தியை விழிப்படைய செய்வதற்கு குருபூர்ணிமா அன்று அதை பூஜை செய்ய வேண்டும். பிறகு எப்பொழுதும் ஆதிசக்தியின் காரியங்களை செய்ய வேண்டும், இதைப் புரிந்து கொண்டு நீங்கள் குருபூர்ணிமாவில் பங்கேற்றுக் கொள்ளுங்கள்!

– பரம் பூஜ்ய பாண்டே மகாராஜ், ஸனாதன் ஆச்ரமம், தேவத்

தகவல் : தினசரி மராட்டி ஸனாதன் பிரபாத் பத்திரிக்கை

Leave a Comment