தினசரி வாழ்வில் செயல்களை செய்யும்போது எந்த ரூபத்திலாவது இறைவன் அல்லது குருவின் இருப்பு பற்றிய தீவிர உணர்வு ஏற்படுவதை இறைவன் அல்லது குரு மீதுள்ள ‘ஆன்மீக உணர்வு’ எனக் கூறுகின்றனர்.
பெரும்பான்மையான ஸாதகர்கள் ஸாதனை செய்வதன் மூலம் ஆன்மீக உணர்வு தானாகவே ஏற்படும் என நம்புகின்றனர். தத்துவ ரீதியாக இது தவறில்லை என்றாலும் நடைமுறையில் அனைவருக்கும் இது சாத்தியம் எனக் கூற முடியாது. ஸாதனை செய்வதன் நோக்கம், கடவுளை அடைய தீவிர தாபம், கடவுளைப் பற்றிய எண்ணப்பதிவு ஆழ்மனதில் ஏற்படுதல், செய்யப்படும் நேரிடையான ஸாதனை முறை போன்ற பல விஷயங்களைப் பொருத்து அமைகிறது. இறைவனிடம் விரைவாக ஆன்மீக உணர்வு ஏற்பட முழு கவனத்துடன் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு செயல்படுத்துவது சிறந்தது. ‘எண்ணம் மற்றும் உணர்வு ஒருவரின் நடத்தையையும் நடத்தை அவரின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளையும் பாதிக்கின்றன’ என்ற கூற்றுக்கு ஏற்ப ஒருவர் மனம் மற்றும் புத்தி நிலையில் தொடர்ந்து செயல்படும்போது ஆன்மீக உணர்வு விரைவாக விழிப்படைகிறது.
இக்கட்டுரையில் ஆன்மீக உணர்வின் கூறுகள், முக்கியத்துவம் மற்றும் வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
1. ஆன்மீக உணர்வின் கூறுகள்
ஆன்மீக உணர்வின் கூறுகள் | முக்கியத்துவம் (%) | ஆன்மீக உணர்வின் கூறுகள் | முக்கியத்துவம் (%) |
பிரார்த்தனை | 20 | ஆனந்தம் | 30 |
நன்றி | 10 | சாந்தி | 10 |
ஸத்சேவை | 10 | மற்றவை | 10 |
ப்ரீதி | 10 | மொத்தம் | 100 |
(தியானத்தின் மூலம் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே (ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதியின் ஊற்றுக்கண்) அவர்களுக்கு கிடைத்துள்ள தெய்வீக ஞானம்.)
மேலே குறிப்பிட்ட கூறுகளுள் பிரார்த்தனை, நன்றி, ஸத்சேவை மற்றும் ப்ரீதி ஆகியவை ஸாதனையின் கூறுகள். மற்ற இரண்டும், அதாவது ஆனந்தம் மற்றும் சாந்தி அதன் பலன்கள். புத்தி, ஆன்மீக உணர்வின் ஒரு கூறு இல்லாததால் ஆன்மீக உணர்வு எப்பொழுதும் எளிமையாக உள்ளது. அஷ்ட ஸாத்வீக உணர்வு விழிப்படையும்போது ஏற்படும் ஆனந்தம் மற்றும் இறைவனை தியானிக்கும்போது உண்டாகும் சாந்தி ஆகியவை இந்த ஆன்மீக உணர்வின் கூறுகளால் ஏற்படுகின்றன. இந்த கடைசி இரு கூறுகளான ஆனந்தம் மற்றும் சாந்தி உறுதிப்பட்டு வளர வேண்டுமென்றால் மற்ற கூறுகள் அந்த ஸாதகரின் மனப்பாங்கின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். ஸாதகரின் மனப்பாங்காக இவை மாற வேண்டுமென்றால் ‘நடத்தை மாறும்போது மனப்பாங்கும் மாறுகிறது’ என்ற விதிப்படி ஒருவர் மனம் மற்றும் புத்தி அளவில் முயற்சிக்க வேண்டும்.
2. ஆன்மீக உணர்வின் முக்கியத்துவம்
2 அ. ஆன்மீக உணர்வு கடவுளின் இருப்பை குறிக்கிறது
ந காஷ்டே வித்யதே தேவோ ந பாஷாணே ந ம்ருண்மயே |
பாவே து வித்யதே தேவோ தஸ்மாத்பாவோ ஹி காரணம் ||
அர்த்தம் : கடவுள், மரத்திலோ, கல்லிலோ, பாஷாணத்திலோ இல்லை. அவர் பக்தியுணர்வு எங்குள்ளதோ அங்கிருக்கிறார். அதனால் ஆன்மீக உணர்வு முக்கியத்துவம் வாய்ந்தது. மகான் ஏக்நாத் அவரின் பாடலில் – ஆன்மீக உணர்வு உள்ள இடத்தில் கடவுள் இருக்கிறாரா அல்லது கடவுள் உள்ள இடத்தில் ஆன்மீக உணர்வு உள்ளதா என கேட்கிறார். நீங்களே இப்புதிரை விடுவித்துக் கொள்ளுங்கள். எது உயர்ந்தது – ஆன்மீக உணர்வா அல்லது ஆண்டவனா. ஆன்மீக உணர்வின் இயல்பிற்கேற்ப ஆண்டவனின் இயல்பும் ரூபமும் இருக்கும். ஆன்மீக உணர்வு அதிகமாகும்போது கடவுளைப் பற்றிய ஆன்மீக அனுபவமும் அதிகமாக ஏற்படும். ஆன்மீக உணர்வு இல்லாதபோது கடவுளும் அங்கு இருப்பதில்லை. அதனால்தான் மகான் ஏக்நாத் சொல்கிறார், அவரின் குரு ஜனார்த்தனசுவாமியின் அருளால் ஆன்மீக உணர்வு எங்குள்ளதோ அங்கு கடவுள் இருக்கிறார், ஆன்மீக உணர்வே கடவுள். யாராவது இதை நம்பாவிட்டால் அவர் இது சம்பந்தமாக அவரின் அந்தக்கரணத்தில் என்ன அனுபவம் ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
2 ஆ. கடவுளின் ப்ரீதியின் அத்தாட்சியே ஆன்மீக உணர்வு
மகான் துகாராம் மகாராஜ் ஒரு பாடலில் கூறுகிறார் – ஒரு பக்தனின் கடமை பகவானிடம் ஒருமித்த ஆன்மீக உணர்வு வைப்பது ஆகும். பக்தியின் ரகசியம் என்னவென்றால் இத்தகைய ஆன்மீக உணர்வை உறுதியான ஸங்கல்பத்துடன் தொடர்ந்து வைத்திருப்பது ஆகும். பக்தர்கள், எவ்வித எதிர்பார்ப்புமின்றி பகவானிடம் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் மற்ற எந்த ஆதரவையும் எதிர்பார்க்கக் கூடாது. பகவானே அவர்களின் ஒரே பிடிப்பாக இருக்க வேண்டும். மகான் துகாராம் மகாராஜ் சொல்கிறார், ஆன்மீக உணர்வுடைய பக்தனை பகவான் புறக்கணித்தார் என்று சரித்திரமே இல்லை.
2 இ. ஆன்மீக உணர்விற்கேற்ற பலன்
மந்த்ரே தீர்த்தே த்விஜே தேவே தைவக்ஞே பேஷஜே குரௌ |
யாத்யஷி பாவனா யஸ்ய ஸித்திர்பவதி தாத்யஷி ||
– ஸ்ரீ குருசரித்ர, அத்தியாயம் 9, ஸ்லோகம் 48
அர்த்தம் : ஒரு மந்திரம், தீர்த்தக்ஷேத்ரம், பிராம்மணர், தெய்வம், ஜோசியர், மருந்து மற்றும் குரு ஆகியோரிடம் இருந்து பெரும் பலன் அவர்களிடம் வைத்திருக்கும் ஆன்மீக உணர்வைப் பொருத்தது.
2 ஈ. கடவுளிடம் உள்ள ஆன்மீக உணர்வு
உண்மையை சொல்லப் போனால் ‘ஆன்மீக உணர்வை’ விவரிக்க இயலாது; உண்மையில் ஆன்மீக உணர்வுடன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களைக் காட்டிலும் அது அப்பாற்பட்டது. ஒருமுறை ஆன்மீக உணர்வு உருவான பின்பு ஒருவர் கடவுளின் தொடர்பில் தொடர்ந்து இருக்கிறார்.
3. ஆன்மீக உணர்வின் வகைகள்
- ஸ்தம்ப (அசைவற்று இருத்தல்)
- ஸ்வேத (வேர்த்தல்)
- ரோமாஞ்சனம் (மயிர்கூச்செறிதல்)
- வைச்வர்யா (குரல் நடுக்கம்)
- கம்ப (நடுக்கம்)
- வைவர்ண்ய (வெளிறிப் போதல்)
- ஆஸ்ருபாத் (கண்ணீர் பெருகுதல்)
- பிரளய-சேஷ்டா நிரோத் (மயக்கமடைதல்)
ஆரத்தி செய்யும்போது அல்லது குரு அல்லது கடவுளை நினைவு கூறும்போது அல்லது அவர்கள் சம்பந்தமாக சில சம்பவங்களை நினைவு கூறும்போது சில ஸாதகர்களுக்கு கண்களில் கண்ணீர் பெருகும் அனுபவம் ஏற்படுகிறது. எட்டு வித ஆன்மீக உணர்வுகளில் இது ஆஸ்ருபாத் ஆகும். எட்டு வித ஆன்மீக உணர்வும் ஒருசேர ஏற்படும்போது அஷ்ட ஸாத்வீக உணர்வு விழிப்படைந்துள்ளது என்று அர்த்தம்.
4. யாரிடம் ஆன்மீக உணர்வு விழிப்படைகிறது?
ஒரு சராசரி மனிதனின் ஆன்மீக நிலை 20% என்றால் மோக்ஷம் அடையப் பெற்ற மகானின் ஆன்மீக நிலை 100% ஆகும். ஆன்மீக உணர்வால் மட்டுமே ஸாதனை நன்கு நடைபெற ஒருவரின் ஆன்மீக நிலை குறைந்த பட்சம் 50% இருத்தல் வேண்டும். அதேபோல் ஆன்மீக பயிற்சி மூலமாக ஆன்மீக உணர்வு விழிப்படையவும் ஆன்மீக நிலை குறைந்தபட்சம் 50% இருத்தல் வேண்டும். இந்நிலையை அடைய ஒருவர் தொடர்ந்து நாமஜபம் செய்து ஸத்சங்கத்தில் பங்கேற்று ஸத்சேவையில் ஈடுபட வேண்டும். ஆன்மீக உணர்வு விழிப்படைந்த பின்பும் அது தொடர்ந்து நிலைத்திருக்க ஸாதனையைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்.