பங்கேற்றோர் : ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த் ஜாகோடியா, போபாலில் உள்ள ‘ராஜசூய ஹிந்து வித்யா கேந்திரா’வின் தலைவர் மற்றும் பாரத அரசின் முன்னாள் கலாச்சார ஆலோசகர் பேராசிரியர் ராமேஸ்வர் மிஸ்ரா, தில்லியிலுள்ள ‘ஹிந்து ஃபிரன்ட் ஃபார் ஜஸ்டிஸ்’ –ன் செய்தி தொடர்பாளர் மற்றும் உச்ச நீதி மன்றத்தின் வக்கீல் திரு விஷ்ணு சங்கர் ஜெயின், ஓடிஸாவிலுள்ள ‘பாரத் ரக்ஷா மன்ச்’-ன் திரு. அனில் தீர் மற்றும் ஹிந்து விதிக்ஞ பரிஷத்’-ன் ராஷ்ட்ரீய செயலாளரான வக்கீல் வீரேந்திர இச்சல்கரஞ்சிகர்
கேள்வி : ‘ஹிந்து என்ற வார்த்தை வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அந்த வார்த்தை அவைதிகமானது’ என்று புகார் செய்யப்படுகிறது. ஹிந்து என்ற வார்த்தை வைதிகமானதா அல்லது அவைதிகமானதா?
பேராசிரியர் ராமேஸ்வர் மிஸ்ரா : ‘ஹிந்து என்ற வார்த்தை வைதிகமானதா அல்லது அவைதிகமானதா’, என்று கேள்வி கேட்பவரின் நோக்கமே தவறானது. இந்த கேள்வியே ஆதாரமற்றது. இவ்வாறு கேள்வி கேட்பவரிடம் ‘அவர்கள் வேதத்தை நம்புகிறாரா இல்லையா?’ என்று எதிர்கேள்வி கேட்க வேண்டி உள்ளது. ‘எவ்வளவு வருடங்களாக இந்த சமூகம் தங்களை ஹிந்து என நம்பிக் கொண்டு வந்துள்ளது. வேதகால குறிப்புகளை ஆராய்ந்தால் அதில் அரசியல் சாசனம் பற்றியும் குறிப்பிடப்படவில்லை. அப்படி என்றால் இக்கேள்வி கேட்கும் நபர் அரசியல் சாசனத்தையும் நம்புவதில்லையா? வேதத்தின்படி ராஜாவிற்கு சட்டத்தை இயற்றும் அதிகாரம் இல்லை. தர்மசாஸ்திரத்தின் நியமங்கள் தெய்வீகமானவை. ராஜாவானவர் அவற்றை அப்படியே பின்பற்றி நிர்ணயங்களை எடுக்க வேண்டியவர் ஆகிறார். வேதத்தில் குறிப்பிட்டபடி இன்றைய அரசியல் சாசன சட்டம் செய்து வரும் முக்கிய காரியமே அவைதிகமானது. பைபிளில் கூட ‘கிறிஸ்துவம்’ என்ற வார்த்தை வரவில்லை.
கேள்வி : ஹிந்து ராஷ்ட்ரம் ஏன் அவசியம்?
திரு. அனில் தீர் : மேகாலயாவின் உயர் நீதி மன்றத்தின் நீதிபதி ஒரு வழக்கில் ‘தர்மத்தை ஆதாரமாகக் கொண்டு தேசம் பிளவுபட்டதால் அப்பொழுதே பாரதம் ‘ஹிந்து ராஷ்ட்ரம்’ என அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்ற தனது கருத்தைக் கூறினார். உச்ச நீதிமன்றம் அந்த நீதிபதியின் இக்கருத்தை அகற்ற உத்தரவிட்டது. இவ்வாறு இருந்தாலும் உச்ச நீதிமன்றம் அந்த நீதிபதியின் கூற்றை தவறு எனக் கூறவில்லை, அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றதல்ல என்றே கூறியது. ‘ஹிந்து ராஷ்ட்ரம்’ என்பது ஹிந்துக்களின் பிறப்புரிமை ஆகும்.
கேள்வி : இன்றைய அரசியல் அமைப்பில் என்ன தவறு உள்ளது? இந்த அமைப்பை மாற்றி ஏன் ‘ஹிந்து ராஷ்ட்ரம்’ அமைக்கப்பட வேண்டும்?
வக்கீல் விஷ்ணு சங்கர் ஜெயின் : ‘ஹிந்து ராஷ்ட்ரம் என அறிவிக்க அரசியல் அமைப்பின் அடிப்படை தத்துவத்தையே மாற்ற வேண்டி வரும்’, என சிலர் அலறுகின்றனர். பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை ஷரத்துகளில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளனர். அந்த 13 நீதிபதிகளில் 9 நீதிபதிகள் கையொப்பம் இட்டனர், மற்ற நால்வரும் கையொப்பம் இடவில்லை. அரசியல் சாசன சட்டம் பற்றிய உண்மையை மறைத்து ஒரு பிரமையை ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கேள்வி : ஹிந்து ராஷ்ட்ர கோரிக்கை ஜாதீயவாதம் இல்லையா?
வக்கீல் வீரேந்திர இச்சல்கரஞ்சிகர் : ஹிந்து ராஷ்ட்ர கோரிக்கை வருடம் 2012 முதல் வியாபகமாக கோரப்பட்டு வருகிறது. அது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாகக் கருதப்பட்டிருந்தால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும்; ஆனால் இதுவரை அவ்வாறு நடக்கவில்லை. இதன் அர்த்தம் ஹிந்து ராஷ்ட்ர கோரிக்கை அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டதே என்பது தெரிகிறது.
கேள்வி : ‘அரசியல் சாசன சட்டம் என்பது நவீன தர்மக்ரந்தம் ஆகும்’, என்று ஒரு பெரிய அரசியல் தலைவர் கூறியுள்ளார். அது சம்பந்தமாக உங்களின் கண்ணோட்டம் என்ன?
பே. ராமேஸ்வர் மிஸ்ரா : இதுவரை அரசியல் சாசன சட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன; ஆனால் தர்ம கிரந்தங்களில் ஒரு மாற்றம் கூட இல்லை. ‘அரசியல் சாசன சட்டத்தை தர்ம கிரந்தம் எனக் கூறுபவர் ஒரு முட்டாள்’, என நான் கருதுகிறேன். அவருக்கு அரசியல் சாசன சட்டமும் தெரியவில்லை, தர்ம கிரந்தத்தைப் பற்றியும் தெரியவில்லை!
கேள்வி : ‘பாஜக அரசு பெரும்பான்மை கொண்டு பதவி ஏற்றுள்ளது; அதனால் ஹிந்து ராஷ்ட்ரம் வந்து விட்டது’, என்று சிலருக்குத் தோன்றுகிறது. அது சம்பந்தமாக உங்களின் கருத்து என்ன?
வக்கீல் விஷ்ணு சங்கர் ஜெயின் : ‘ஹிந்து ராஷ்ட்ரத்தை அமைப்பது’ என்பது பாஜக –வின் தேர்தல் அறிக்கையில் இல்லை. மற்ற மதத்தினருக்காக சுதந்திரமான வியாசபீடத்தை அமைத்துக் கொடுக்கும், காஷ்மீரில் மத அடிப்படைவாதிகளுடன் ஒத்துப் போகும் இவர்களால் ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை அமைக்க முடியாது. இன்றைய நிலையில் எந்த மக்கள் பிரதிநிதியும் ஹிந்து ராஷ்ட்ர கோரிக்கையை எழுப்பவில்லை, அப்படி எழுப்பினாலும் அவருக்கு ஆதரவு கிடைக்கும் நிலையும் இல்லை. ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்தை ஸனாதன் ஸன்ஸ்தாவால் மட்டுமே பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலுடன் ஏற்படுத்த முடியும்.
கேள்வி : ஹிந்து ராஷ்ட்ரம் ஜனநாயகமா அல்லது ராஜநாயகமா?
பே. ராமேஸ்வர் மிஸ்ரா : இந்த நிர்ணயத்தை அது நிகழும் காலத்தில் உள்ள தர்மாச்சார்யர்கள் செய்வர்.
கேள்வி : முன்னேற்றவாதம் வேண்டுமா அல்லது ஹிந்து ராஷ்ட்ரவாதம் வேண்டுமா?
பே. ராமேஸ்வர் மிஸ்ரா : ராஷ்ட்ரவாதம் என்ற வார்த்தையே தவறு. அந்த இடத்தில் ‘ராஷ்ட்ரபக்தி’ என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும். இன்றைய அரசியலில் பல அர்த்தமற்ற வார்த்தைகள் உபயோகத்தில் உள்ளன. ‘விகாஸ்’ என்பதும் இதில் ஒன்று. விகாஸ் என்ற வார்த்தையின் மூல அர்த்தம் ‘ஆன்மீக விகாஸ்’, அதாவது ‘ஆன்மீக முன்னேற்றம்’ என்பது ஆகும். உலகியல் விகாஸ் எதிர்பார்க்கப்படவில்லை. உலகியல் முன்னேற்றம் என்பது தனி மனிதன் அல்லது சமூகம் செய்து கொள்ள வேண்டியது. ஒரு ராஜா செய்ய வேண்டிய வேலை அல்ல அது. அரசாங்கத்தின் ‘ஏழ்மையை ஒழிப்போம்’ என்ற கோஷமும் இதுபோன்று நகைப்பிற்குரியது. ‘எந்த ஸர்க்கார் தானே ஏழையாக இருந்து கொண்டு கடன் வாங்கி வாழ்கிறதோ’ அது ஏழ்மையை எவ்வாறு ஒழிக்க இயலும்? ராஜாவின் முக்கிய கடமை ராஜ்யத்தை பாதுகாப்பது. 1 நவம்பர் 1858 வருடம் ராணி விக்டோரியா பாரதம் வந்தபோது அவர் இங்குள்ள மக்களுக்கு உறுதி மொழி அளித்தார், இங்கிலாந்து நம் தர்மத்தில் தலையிடாது என்று. எந்த ஸர்க்கார் பெரும்பான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறி விட்டதோ அந்த ஸர்க்காருக்கு அரசாளும் உரிமை இல்லை. தர்மத்தின் புனர்நிர்மாணம், விழிப்புணர்வு மற்றும் அதர்மத்தின் நாசம் ஆகியவையே உண்மையான முன்னேற்றமாகும்.
கேள்வி : ஹிந்துக்களுக்கு என்ன அறிவுரை வழங்க விரும்புகிறீர்கள்?
வக்கீல் விஷ்ணு சங்கர் ஜெயின் : நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சிந்தனை நிலையில் ஸனாதன் ஸன்ஸ்தாவுடன் இணைந்து செயல்படுங்கள். சிந்தனை மேம்பட இது உதவும். ஸனாதன் ஸன்ஸ்தா மற்றும் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியைத் தவிர்த்து வேறு எவரும் இவ்வளவு தெளிவாக ஹிந்து ராஷ்ட்ர விஷயத்தைப் பற்றிக் கூறுவது கிடையாது. லட்சியத்தை அடையும் நோக்கத்துடன் செயல்படும் ஸ்தாபனமாக இது உள்ளது. ஒரு நாள் ஹிந்து ராஷ்ட்ரத்தில் தில்லி ரெட் ஃபோர்ட்டில் காவிக் கோடி பறந்தால் அது ஸனாதன் மற்றும் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் காரியகர்த்தாக்களால் பறக்கும். இந்த ஒருங்கிணைப்பை அதிகமாக பலப்படுத்துங்கள்.
திரு. அனில் தீர் : புராதன கலாச்சாரத்தை ஆன்மீக பரம்பரையை போற்றுங்கள். இவற்றின் மீதுள்ள அபிமானம் நஷ்டமடைய விடாதீர்கள்.
பே. ராமேஸ்வர் மிஸ்ரா : ‘தர்மத்தைக் காப்பாற்றுங்கள், தர்மத்தை மேம்படுத்துங்கள்’, ‘ராஷ்ட்ரத்தை காப்பாற்றுங்கள், ராஷ்ட்ரத்தை மேம்படுத்துங்கள்’ மற்றும் ‘ஸாதனை செய்து உங்களின் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.’
கேள்வி : ‘ஹிந்து ராஷ்ட்ர கோரிக்கை என்பது ‘ஹிந்து பாகிஸ்தானை’ நோக்கி செல்லும், என்று காங்கிரஸ் சசி தரூர் கூறியுள்ளார். அது சம்பந்தமாக உங்களின் கண்ணோட்டம் என்ன?
வக்கீல் இச்சல் கரஞ்சிகர் : ரஷ்யாவிலிருந்து கம்யுனிசம் நீக்கப்பட்டு விட்டது. இஸ்லாமிய அமைப்புள்ள பல நாடுகள் இன்று திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. புத்திவாதம் பெருகி வரும் மேற்கத்திய நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இது போன்ற சமயத்தில் ஏன் ஆன்மீக சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஹிந்து ராஷ்ரத்திற்கு ஒரு வாய்ப்பு தரக் கூடாது?
‘ராஷ்ட்ரஸ்ய மூலோ இந்த்ரிய நிக்ரஹ:’, என்று ஆர்ய சாணக்யர் கூறியுள்ளார். அது போன்ற, புலன்களிலிருந்து விடுபட்ட சமூகத்தினரை உருவாக்க வேண்டும்.
பே. ராமேஸ்வர் மிஸ்ரா : சசி தரூருக்கு ‘முஸ்லிம் பாகிஸ்தான்’ விருப்பமாக இருக்கும் பட்சத்தில் ‘ஹிந்து பாகிஸ்தான்’ சம்பந்தமாக அவருக்கு என்ன பிரச்சனை?
திரு. அனில் தீர் : பராத்பர குரு டாக்டர் ஆடவலே, ஸத்குரு டாக்டர் பிங்களே போன்ற வழிநடத்தி செல்லும் மகான்களே சமூகத்திற்கு தேவை.
மற்ற முக்கிய கருத்துக்கள்
வக்கீல் இச்சல் கரஞ்சிகர் :
‘குரானிலுள்ள சில வரிகள் வெறுப்பு மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது’, என்று கூறி அவற்றை குரானிலிருந்து நீக்குமாறு வங்காள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது சம்பந்தமாக தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றம், அவ்வாறு செய்தால் தர்மம் நஷ்டமடையும் எனக் கூறியது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தார்மீக விஷயங்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. அதனால் ஹிந்து பெரும்பான்மையாக உள்ள பாரதத்தில் ஹிந்து ராஷ்ட்ர கோரிக்கை எவ்வாறு ஜாதீயவாதம் ஆகும்?
‘உஜ்ஜயின் ஸ்ரீ மகாகால் கோவிலில் சிவலிங்கத்திற்கு சாதாரண தண்ணீரால் அபிஷேகமா அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் அபிஷேகமா?’, ‘எந்த வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய செல்லலாம்?’ போன்ற விஷயங்களைப் பற்றி தீர்ப்பு சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு நேரம் உள்ளது; அனால் ராமர் கோவில் வழக்கை தீர்ப்பதற்கு நேரம் இல்லை!
பே. ராமேஸ்வர் மிஸ்ரா :
‘சிறுபான்மையினரைப் போலவே பெரும்பான்மையினருக்கும் அதிக இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும்’, ‘அரசியல் சாசன சட்டத்தில் ‘மதசார்பின்மை’ என்ற பதத்திற்கு சரியான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
ஸர்க்கார் என்றால் அதுதான் கடவுள் என்று நிர்மாணம் ஆகியுள்ள உணர்வு நீங்க வேண்டும். அது சமூகத்தின் ஒரு பிரதிநிதியே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.