கலை கலைக்காக மட்டுமல்ல, இறைவனை அடைவதற்காக கலை

ஒரு கலைஞன் மறுபிறவி எடுக்கும்போது மற்ற சராசரி ஜீவன்களைக் காட்டிலும் இறைவனிடமிருந்து அதிகம் பெற்று வருகிறான். இறையருள் இன்றி கலையைக் கைக்கொள்ள இயலாது. ஒரு கலைஞன் இந்த இறைவருளைக் கொண்டு இறைவனை அடைய முயற்சித்தால் அவன் தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்கிறான். இதையே ஸனாதன் ஸன்ஸ்தா கற்றுத் தருகிறது. கலையை பெயருக்காகவும் புகழுக்காகவும் பயன்படுத்துவது என்பது நாம் பிறப்பு எடுத்ததன் முக்கிய நோக்கத்தை விட்டு விலகிப் போகிறோம் என்று அர்த்தமாகிறது.

ஸனாதன் ஸன்ஸ்தா, பல்வேறு கலைகளின் மூலம் இறைவனை எவ்வாறு அடைவது என்பதைக் கற்றுத் தருகிறது. இன்று பல ஸாதகர்கள் ஸனாதன் ஸன்ஸ்தாவின் வழிகாட்டுதல் மூலமாக பல்வேறு வழிகளைப் பின்பற்றி ஆன்மீக ஸாதனை செய்து வருகின்றனர். இந்த கட்டுரைத் தொகுப்பின் வாயிலாக பல்வேறு கலைகளின் மூலம் ஸாதக-கலைஞர்கள் ஆன்மீக பயிற்சி செய்து எம்மாதிரியான ஆன்மீக அனுபவங்களை அடைந்தனர், என்னென்ன முயற்சிகள் செய்தனர் என்பது பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.  முயற்சிகள் செய்த பின்னர் எவ்வாறு இறைவனே ஞானமளித்து வழிகாட்டுகிறார் என்பதையும் சில ஸாதகர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.

 

1.இறைவனை அடைவதற்காக சித்திரம் மற்றும்
தெய்வங்களின் ஸாத்வீக படங்களை வரைவதன் அடிப்படை

இன்று கலியுகத்தில் மக்களின் ஸாத்வீகத் தன்மை வெகுவாக குறைந்து விட்டது. இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்படும் தெய்வங்களின் படங்களும் மூர்த்திகளும் ஸாத்வீகமாக இருந்தால்தான் பக்தனுக்கு ஆன்மீக பயிற்சி செய்யத் தோன்றும். இதைப் பற்றி சிந்தித்த பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள், நாமே இத்தகைய ஸாத்வீக தெய்வப் படங்களை உருவாக்கி அதன் மூலம் மக்கள் ஈர்க்கப்பட  வேண்டும் என எண்ணினார். அவர் நினைத்த சில மாதங்களுக்கு உள்ளாகவே கலையில் பட்டப்படிப்பு முடித்திருந்த இரு ஓவியர்கள் குமாரி ச்ருதி ஷெலார் (தற்போது திருமதி ஜானவி ஷிண்டே) மற்றும் குமாரி அனுராதா வாடேகர் (தற்போது ஸத்குரு குமாரி அனுராதா வாடேகர்) ஆகியோர் 1997-ல் ஸனாதன் ஸன்ஸ்தாவில் இணைந்தனர். மாதம் இருபதாயிரத்திற்கும் மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இருவரும் தங்களின் நல்ல வேலையை உதறித் தள்ளி இறைவனை அடைவதற்காக இவ்வழியின் மூலம் ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பித்தனர்.

 

2.ஸாதகர்கள் வரைந்த தெய்வப்
படங்களில் அதிக தெய்வீக தத்துவம் ஈர்க்கப்பட
படிப்படியாக அவர்களின் செயல்திறனை உயர்த்துதல்

ஸ்ரீ துர்காதேவியின் உருவத்தை வரையும் ஒரு ஸாதகர்

ஓவியத்திலுள்ள தெய்வீக தத்துவம் அந்த தெய்வத்தின் பிரபஞ்ச வடிவத்துடன் அதிக அளவு ஒத்துப் போவதற்காக கோடுகளின் சூட்சும பரிசீலனை செய்து ஸாதகர்கள் தெய்வப் படங்களை வரைகின்றனர்.

ஸாதக-ஓவியர்களின் பக்தியுணர்வு எந்த அளவு இருக்க வேண்டுமென்றால் அந்த தெய்வமே நேரில் தோன்றி அவர்கள் வரைவதற்கு காட்சி அளிக்க வேண்டும் என்று பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களுக்கு அறிவுரை வழங்குவார். ஆரம்பத்தில் ஸனாதன் ஸன்ஸ்தா 6% தெய்வ தத்துவத்தை ஆகர்ஷிக்கக் கூடிய தெய்வப் படத்தை வரைவதற்கு 6 முதல் 8 மாதங்கள் எடுத்துக் கொண்டது. படிப்படியாக இந்த செயல்திறன் 10%-திலிருந்து 12%, பின்பு 14% அதிகரித்து தற்பொழுது 27% ஆக உள்ளது. கலியுகத்தில் ஒரு தெய்வப் படம் அதிகபட்சம் 30% தெய்வ தத்துவத்தையே ஆகர்ஷிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. .

 

3.ஸனாதன் உருவாக்கியுள்ள
ஸாத்வீகப் படங்களின் சிறப்பு அம்சங்கள்

தெய்வப் படத்தை வரையும் ஒரு பெண் ஸாதகர்

இறைவனை அடைவதை நோக்கமாகக் கொண்டு ஆன்மீக பயிற்சியாக தெய்வப் படங்களை வரையும் ஸாதகர்களுக்கு அந்த தெய்வமே மகான்களின் ரூபத்தில் உதவி செய்கிறது. ஸனாதன் உருவாக்கியுள்ள ஸாத்வீகப் படங்கள் இவ்வாறு வரையப்பட்டதே.

 

 

 

4.இறைவனை அடைவதற்காக மூர்த்திகளை வடித்தல்

தெய்வ மூர்த்தியை வடிப்பதன் மூலமாக ஆன்மீக பயிற்சி

ஒருமுறை பராத்பர குரு டாக்டர் ஆடவலே தனக்குத் தானே ‘தெய்வப் படங்களை நாம் வரைய ஆரம்பித்துள்ளோம், மூர்த்திகளையும் வடித்தால் என்ன?’ என்று சிந்தனை செய்தார். அதன் பின்பு பூனாவிலிருந்து ஒரு ஸாதகர் திரு குருதாஸ் காண்டேபர்கர் ஸனாதன் ஸன்ஸ்தாவுடன் இணைந்தார். அவரே கணபதியின் ஸாத்வீக மூர்த்தியை வடித்தவர்.

ஒரு ஸாத்வீக மூர்த்தியின் அளவுகள் என்னவாக இருக்க வேண்டும் என்ற விஷயங்களை ஸனாதன், நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது. திரு காண்டேபர்கர் ஸனாதனின் ராம்நாதி ஆச்ரமத்தில் கணபதியின் மூர்த்தியை வடித்துக் கொண்டிருக்கும்போது இரண்டு மூன்று மகான்கள் ஆச்ரமத்தைப் பார்வையிட வந்தனர். அவர்கள் ஆச்ரமத்திற்குள் நுழைந்தவுடன் அதிகபட்ச ஸாத்வீகத் தன்மையை உணர்ந்ததாகக் கூறினார். அந்த மூர்த்தி பாதி முடிந்த நிலையிலேயே அதிக அளவு சைதன்யத்தை கொண்டிருந்ததாக இருந்தது. காரணம், மூர்த்தியை வடித்த கலைஞரின் பக்தி மற்றும் ஆன்மீக உணர்வாகும். ஒன்றரை வருடங்கள் அதற்காக செலவிட்ட பின்னர் அந்த மூர்த்தி 29% கணபதி தத்துவத்தை ஆகர்ஷிக்க வல்லதாக விளங்கியது.

 

5.இறைவனை அடைவதற்காக நாட்டியம்

ஆன்மீக பயிற்சியாக நாட்டியம்

நம் கலாச்சாரத்தில் கோவிலில் இருந்து உருவானது நாட்டியம். பக்தியின் வெளிப்பாடாகவே அது உருப்பெற்றது. நாம் நாட்டியத்தை மரியாதையுடன் கூடிய ஆன்மீக கண்ணோட்டத்தோடு ஒரு கலை உருவமாக பார்க்கிறோம். தார்மீக கொண்டாட்டங்களின்போது நாட்டியமான இந்த கலை வடிவத்தை வழங்குவதன் மூலம் ஹிந்துக்கள் இதை மகிழ்ச்சி தரும் மனோரஞ்சகமான நிகழ்ச்சியாக பயன்படுத்த பழகி விட்டனர்.

நவரசங்களின் மூலம் நாட்டிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு முயலப்படுகிறது. (கருணை, வீரம், ரௌத்ரம், ஸ்ருங்காரம், பீபத்ஸம், சாந்தம், ஹாஸ்யம், பயாவஹம், அத்புதம்) ஸனாதனின் பெண் ஸாதகர்கள் திருமதி சாவித்திரி இச்சல்கரஞ்சிகர் மற்றும் டாக்டர் குமாரி ஆர்த்தி திவாரி ஆகியோர் நாட்டியம் என்ற கலை வடிவத்தின் மூலமாக சக்தி, சைதன்யம், ஆனந்தம் மற்றும் சாந்தி ஆகிய அனுபவங்களை எவ்வாறு பெறுவது என்பது பற்றி பயின்று வருகின்றனர். இறைவனை அடையும் செயல்முறையாக இதை ஆரம்பித்து நாட்டியத்தின் மூலம் நிரந்தர ஆனந்தத்தைப் பெற முயற்சிக்கின்றனர்.

 

6.இறைவனை அடைய சங்கீதம்

சூட்சும பிரிவை சேர்ந்த திருமதி அஞ்ஜலி காட்கில் (தற்போது ஸத்குரு அஞ்ஜலி காட்கில்) தன் ஆன்மீக பயிற்சியை சங்கீதத்தின் மூலமாக ஆரம்பித்தார்.

சங்கீதத்தின் மூலம் ஆன்மீக பயிற்சி

எந்த ஒரு ராகத்தைப் பாடும்போதும் (ராகம் என்பது ஒரு நாளின் பல்வேறு சமயங்களில் பல்வேறு மனோபாவங்களை வெளிப்படுத்தும் பாரதீய கர்நாடக சங்கீதத்தின் சங்கீத ஸ்வரக் கோர்வைகள்) ஆன்மீக கண்ணோட்டம் எவ்வாறு இருக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட ராகத்தின் தாக்கம் என்ன அல்லது ஸ்வர்க்க லோகத்தில் எவ்வகை சங்கீதம் உள்ளது ஆகிய விஷயங்கள் எந்த புனித நூலிலும் வழங்கப்படுவது இல்லை. மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதுடன் கூட சங்கீதம் எம்மாதிரியான சூட்சும விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி ஸத்குரு திருமதி அஞ்ஜலி காட்கில் அவர்கள் பயில்வதற்கு முயற்சி செய்தார். பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலின்படி அவர்கள் இறைவனிடமிருந்து பதில்களை பெற முயலும்போது சங்கீதத்தின் முழு விஸ்தீரணத்தைப் பற்றிய ஞானம் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தது. பல்வேறு ராகங்கள் ஆன்மீக நிலையின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி அவர் பயின்றுள்ளார். நிரந்தர ஆனந்தத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவருக்கு கிடைத்துள்ள ஞானம் சங்கீத ரசிகர்களுக்கு பெரும் வரபிரசாதமாக அமையும்.

பல்வேறு கலை வடிவங்களைப் பற்றி ஸனாதன் ஸன்ஸ்தாவின் கண்ணோட்டம் – கலையை கலைக்காக மட்டும் பயிலாமல் இறைவனை அடைய உதவும் கருவியாக பயின்றால் பல்வேறு கலைகளின் மூலமாக இறைவனை எவ்வாறு அடைவது என்பதை கற்க அது உதவும்.

Leave a Comment