பிரபு ஸ்ரீராமனுடன் சம்பந்தப்பட்ட ஸ்ரீலங்கா மற்றும் பாரதத்தில் உள்ள சில இடங்களை பக்திபூர்வமாக தரிசனம் செய்யுங்கள்!

ராமாயணம் என்பது பாரதத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷம் மற்றும் இதிகாசம் ஆகும். முற்போக்குவாதிகள் எவ்வளவு பெயரை மாற்றியும் இருப்பை இல்லாமல் போக்கடிக்கவும் முயற்சித்தாலும் இராமாயண காலத்தின் பல்வேறு சம்பவங்களை நினைவுறுத்தும் இந்த புகைப்படங்கள் இதிகாசத்தின் சாட்சியாக விளங்குகின்றன. இராமாயண காலம் என்பது த்ரேதா யுகத்தில் அதாவது லக்ஷக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்த காலம். அதன் மூலம் ஹிந்து கலாச்சாரத்தின் மகத்துவம், புராதன தன்மை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கு இராமாயண காலத்து ஸ்ரீலங்காவிலுள்ள சில சிறப்பு இடங்களை காண்பிக்க முயற்சி செய்துள்ளோம். சீதாமாதா அபஹரணத்திற்கு பின்பு இங்கு வசித்த இடங்களையும் நாம் பார்க்க உள்ளோம்.

1. சீதாமாதா எங்கு அக்னி பிரவேசம் செய்தாரோ அங்குள்ள அரச மரமும் கோவிலும். ஸ்ரீலங்காவின் மத்திய பாகத்தில் உள்ள மிக உயர்ந்த மலை மீதுள்ள ஸ்தானம் இது.
2. ‘குருலூபோதா’வில் ராவணனின் மனைவி மண்டோதரி மாளிகையின் இடிபாடுகள்! சீதாமாதாவை அபகரித்த பின் ராவணன் சீதாமாதாவை இந்த மாளிகையில் வைத்தான்.
3. மகாராணி மண்டோதரி மாளிகையின் தெற்கு புறத்தில் உள்ள இந்தப் படிகளில் இறங்கி சீதாமாதா இங்குள்ள நதியில் நீராட செல்வார்!
4. ‘சீதாமாதாவை தேடி வந்த ராமபக்த ஹனுமான் அசோக மரத்தினடியில் உள்ள இந்த கல்லின் மீது சீதாமாதா உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்’ எனக் கூறுகின்றனர். கல்லின் மீது ஹனுமாரின் கால்தடம் பதிந்துள்ளது.

 

சரயு நதிதீரத்தில் மனு நிர்மாணித்த அயோத்யா நகரம்…

த்ரேதா யுகத்தில் ஸ்ரீராமன் தன் குடிமக்களுடன் அயோத்யாவில் ஓடும் சரயு நதியில் ஜலசமாதி அடைந்தார் என்றால் கலியுகத்தில் ராமஜன்மபூமி போராட்டம் சம்பந்தமாக வருடம் 1990-ல் அயோத்யாவிற்கு வந்த கரசேவகர்கள் மீது அப்போதைய முதன்மந்திரி முலாயம் சிங் யாதவ் குண்டு வீச்சு நடத்த உத்தரவிட்டார். பின்பு கரசேவகர்களின் பிணங்கள் இந்த சரயு நதியில் வீசப்பட்டன.

 

ஸ்ரீராமனின் ராமஜன்மபூமியில் ஒரு கொட்டகை!

பாரதத்தின் அரசனான, ராவணனை அழித்து ஸ்ரீலங்காவை ஜெயித்த அவதார புருஷனான பிரபு ஸ்ரீராமனின் அயோத்யாவிலுள்ள இன்றைய நிலை! கடந்த பல வருடங்களாக ஸ்ரீராமன் இந்த கொட்டகையிலேயே உள்ளார். ஸ்ரீராமனுக்கு இதைக் காட்டிலும் பெருத்த அவமானம் வேறு என்ன இருக்க முடியும்? ஹிந்து சமூகத்தின் ஆராதனை தெய்வம் இவ்வாறு வெயில், மழை, குளிர் ஆகியவற்றை சகித்துக் கொள்ள வேண்டியிருப்பது ஹிந்து சமூகத்திற்கே பெரும் வெட்கக் கேடு இல்லையா?

தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்

Leave a Comment