விடியற்காலையில் உறங்குவது என்பது அந்த நேரத்திலுள்ள ஸாத்வீக அதிர்வலைகளின் பயனை அடையாமல், நாமஜபம் செய்யாமல் உறக்கத்திற்கு அடிமையாவது என்பதாகும். இது பாவத்திற்குரிய செயலாக கருதப்படுகிறது.
விடியற்காலையிலிருந்து 11 மணி
வரை வாயுமண்டலம் ஸாத்வீகமானதாகவும்
சைதன்யம் மிகுந்ததாகவும் இருப்பதால் ஸாதனை மற்றும் சுப
கர்மா செய்வதற்கு இந்த சுழ்நிலை மிகவும் சாதகமாக உள்ளது
சூரிய கிரணங்களின் மூலமாக சூரியதேவனின் அதி சூட்சுமமான சக்தி மற்றும் சைதன்யம் வாயுமண்டலத்தில் பரவுகிறது. இதனால் விடியற்காலையிலிருந்து 11 வரை வாயுமண்டலம் ஸாத்வீகமானதாகவும் சைதன்யம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இதனால் ஸ்தூலதேஹம் மற்றும் மனோதேஹத்தின் பிராணசக்தி அதிகரிக்கிறது. இதன் பலனாக அவற்றின் ஆற்றலும் செயல்திறனும் அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலை ஸாதனை மற்றும் சுப கர்மாக்களுக்கு அதிக அளவு சாதகமாக உள்ளது. விடியற்காலையில் சரீரம் மற்றும் மனம் மிக சுலபமாக செயல்பட ஆரம்பிப்பதால் சரீரம் மற்றும் மனதின் ஆற்றல் அதிகரிக்கின்றது. அதனால் விடியற்காலையில் எழுந்து ஈஸ்வரனை தியானித்து சுப கர்மாக்களை செய்வதால் அந்தக் காரியங்கள் மிக உன்னதமான முறையில் நிறைவேற்றப்படுகிறது. அதனால் தான் தர்மம், ‘இரவில் சீக்கிரமாக உறங்கி விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும்’ போன்ற தினசரி காரியங்களை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது.
பகல் நேரம் ஸாதனைக்கு சாதகமாகவும் இரவு நேரம் ஸாதனைக்கு பாதகமாகவும் விளங்குகிறது. பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டும் முக்கிய காலங்களாகும். இவ்விரண்டிலும் தீயசக்திகளின் ஸஞ்சாரம் இரவைக் காட்டிலும் பகலில் மிகக் குறைவாகவே உள்ளது. அதனால் பகலில் அதிகபட்ச அளவு ஸாதனை செய்து இரவு நேரத்தில் நடந்து முடிந்த ஸாதனையை பற்றி சிந்தித்து, நாள் முழுவதும் நடந்த தவறுகளை திருத்த ஸங்கல்பம் செய்து மறுநாள் பரிபூர்ண ஸாதனை செய்வதற்கு முயற்சிப்பதே ஈச்வரன் நம்மிடம் எதிர்பார்க்கும் செயலாகும். அதனால் பகலில் உறங்காமல் இருங்கள்.
ஆரோஹணம் கவாம் ப்ருஷ்டே ப்ரேததூமம் ஸரித்தடம் |
பாலாதபம் திவாஸ்வாபம் த்யஜேத்க்கம் ஜிஜுவிஷூ: ||
– ஸ்கந்தபுரணம், ப்ராம்ஹகண்டம், தர்மாரண்யமாஹாத்மியம் அத்தியாம்6, சுலோகம்66
அர்த்தம் : யார் தீர்க்காயுளுடன் இருக்க விரும்புகின்றனரோ அவர்கள் பசு, காளை மீது உட்கார கூடாது, மயான புகை உடல் மேல் பட விடக் கூடாது, ஸாயங்காலம் கங்கையை தவிர மற்ற நதிக்கரைகளில் உட்கார கூடாது, சூரியனின் கிரணங்கள் மேலே பட விடக் கூடாது மற்றும் பகலில் உறங்கக் கூடாது.