‘ஹிந்து தர்மத்தில் மறுபிறவி மற்றும் கர்மபல நியாயம் கூறப்பட்டுள்ளது. அதன்படி உங்களின் மரணத்திற்கு பின்பு உங்களின் லிங்கதேஹத்தின் (சூட்சுமதேஹத்தின்) பிரயாணம் மேற்கொண்டு நடக்கிறது. 84 லக்ஷ யோனிகளில் பிரயாணம் செய்த பின் மனிதப்பிறவி கிடைக்கிறது. அத்துடன் இப்பிறவியில் நீங்கள் இறைவனை அடைய முடியும்’ எனவும் சொல்லப்படுகிறது. இதன்படி இறப்பிற்கு பின்னர் என்ன நடக்கிறது? இதைத் தெரிந்து கொள்ள அனைவரிடமும் ஆர்வம் உள்ளது. ஸனாதனின் சூட்சும-ஞானம் கிடைக்கப்பெறும் ஸாதகர் குமாரி மதுரா போஸ்லே அவர்களுக்கு யமதர்ம ராஜனின் தர்மவழிப்படியான நியாயம் வழங்கும் செயல்முறை சம்பந்தமாக சூட்சும ஞானம் கிடைத்துள்ளது. அதை இங்கு வழங்குகிறோம். இதில் நல்ல-தீய கர்மாக்களின்படி மேற்கொண்டு கிடைக்கும் கதி பற்றியும் இங்கு கூறப்பட்டுள்ளது. லோகமான்ய திலகருக்கு ஆங்கிலேய நீதிபதி தண்டனை வழங்கியபோது அவர், ‘நான் எந்தவித குற்றமும் செய்யவில்லை. இந்த நீதிமன்றத்தில் எனக்கு தண்டனை வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இதைக் காட்டிலும் பெரிய நியாயம் வழங்கும் செயல்முறை இறைவனுடையது ஆகும். அங்கு எனக்கு சரியான நியாயம் வழங்கப்படும்’, எனக் கூறி தர்மவழிப்படியான நம் நியாய செயல்முறையின் மீது தனக்குள்ள நம்பிக்கையைத் தெரிவித்தார்.
1. பாவிகள் இறப்பிற்கு பின்னர் யமபுரிக்கு செல்லுதல்
பாவிகளின் இறப்பிற்குப் பின்னர் யம தூதர்கள் பாவிகளின் லிங்கதேஹங்களை தெற்கு திசை வழியாக எடுத்து சென்று 16 யமபுரிகளைத் தாண்டி 17-வது முக்கிய யமபுரிக்கு அழைத்து செல்கிறார்கள்.
2. யமதர்ம ராஜனின் நியாய தர்பார்
யமபுரியின் உள்ளே தர்மசிம்மாசனத்தில் வீற்றிருக்கும் யமதர்மராஜன், சித்ரகுப்தன் ஆகியோருடன் முக்கிய யமதூதர்கள் நியாய தர்பாரில் உள்ளனர்.
3. யமதர்மனின் நியாயம் வழங்கும் செயல்முறை
3 அ. சித்ரகுப்தன் கர்ம பட்டியலை வாசித்துக் காண்பித்தல்
சித்ரகுப்தன், பாவியின் லிங்கதேஹத்திடம் அதன் வாழ்க்கையில் மனதால், வாக்கால் மற்றும் கர்மாக்களால் ஒவ்வொரு க்ஷணமும் செய்த நல்ல-தீய கர்மாக்களின் பட்டியலை வாசித்துக் காண்பிக்கிறார்.
3 ஆ. 17 தெய்வீக சக்திகள் அந்தக் கணமே
சாட்சி சொல்வதற்கு யமபுரிக்கு வருதல்
லிங்கதேஹம் ஒரே ஒரு கர்மாவை ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் சித்ரகுப்தனின் அழைப்பால் 17 தெய்வீக சக்திகள் சாட்சி சொல்வதற்கு யமபுரிக்கு அந்தக் கணமே வருகின்றனர். ‘பிருத்வி, சூரியன், சந்திரன், வருணன், மேகம், வாயு, அக்னி, குபேரன், காமதேவன், விச்வகர்மா, தன்வந்தரி, அச்வினிகுமார்கள், இந்திரன், ஸப்தரிஷிகள், நக்ஷத்திர தேவதைகள், க்ருஹதேவதை மற்றும் அந்தரீக்ஷதேவதை’, ஆகியவை இந்த 17 தேவதைகளின் பெயர்களாகும்.
3 இ. ‘அந்தர்சாக்ஷி’ எனப்படும் ஆழ்மனம் லிங்கதேஹம்
செய்த பாவ கர்மாக்களை பெருத்த குரலில் கத்தி வெளிப்படுத்துதல்
பாவி லிங்கதேஹத்தின் ‘அந்தர்சாக்ஷி’ எனப்படும் ஆழ்மனம் (விவேகம்) லிங்கதேஹத்தை விட்டு வெளியேறுகிறது. அந்தர்மனம் தெய்வீக சாட்சி தரும் 17 தெய்வங்களுக்கு அருகில் நின்று கொண்டு லிங்கதேஹம் செய்த பாவ கர்மாக்களை பெருத்த குரலில் கத்தி வெளிப்படுத்துகிறது.
3 ஈ. யமதர்மராஜன் பாவங்களை முழுவதுமாகக்
களைய தண்டனையின் பிரமாணம், ஸ்வரூபம் மற்றும்
காலம் ஆகியவற்றை கண நேரத்தில் முடிவு செய்தல்
இறந்தவரின் பாவ கர்மாக்களின் பிரமாணம், ஸ்வரூபம் மற்றும் பாவத்தின் தீவிரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு யமதர்மராஜன் பாவங்கள் தொலைய தண்டனை, தண்டனையின் ஸ்வரூபம், தண்டனையின் காலவரை மற்றும் நரகம் ஆகியவற்றைக் கண நேரத்தில் நிச்சயிக்கிறார். (இதற்கு மாறாக இன்றைய நீதிமுறை நியாயம் வழங்க பல வருடங்கள் எடுக்கின்றன, தருகிற தீர்ப்பும் சரியானதா என்பது நிச்சயம் கிடையாது.) யமராஜன் நிச்சயித்த தண்டனையின் பிரமாணம், ஸ்வரூபம் மற்றும் காலவரை எவ்வளவு துல்லியமானது என்றால் விதிக்கப்பட்ட காலவரைக்குள் பாவங்கள் அனைத்தும் தொலைந்த பின் பாவங்களிலிருந்து விடுபட்ட அந்த லிங்கதேஹம் ஒரே கணத்தில் நரகத்திலிருந்து வெளியே வருகிறது.
3 உ. பாவி லிங்கதேஹம் ஒரே கணத்தில் நரகத்தை அடைதல்
சம்பந்தப்பட்ட நரகத்தின் முக்கிய யமதூதர் பாவி லிங்கதேஹத்தை தண்டனையை அனுபவிப்பதற்காக கூட்டி செல்கிறார். அடுத்த கணம் பாவி லிங்கதேஹம் சம்பந்தப்பட்ட நரகத்தை அடைகிறது.
4. யமராஜனின் ஈடுஇணையற்ற தெய்வீக காரியத்தினால் அவருக்கு மிக உயர்ந்த பதவியான ‘தர்மமும்’ மிக உயர்ந்த சிறப்பு
நாமமான ‘யமதர்மன்’ என்ற பெயரும் கிடைத்துள்ளது !
4 அ. நியாயம் வழங்கும் திவ்யசக்தி
யமதர்மராஜன் பாவத்தின் பிரமாணத்திற்கேற்ப நிச்சயிக்கும் தண்டனையின் பிரமாணம், ஸ்வரூபம் மற்றும் காலவரை 100 % துல்லியமாக இருப்பதால் இந்த நிர்ணயம் 100 % ஸத்யமானதாகவும் பரிபூரணமானதாகவும் உள்ளது. யமராஜன் தரும் நிர்ணயம் எல்லா விதங்களிலும் தர்மத்தின் விதிகளை வழுவாதிருப்பதால் இந்த நிர்ணயம் ‘நியாயம்’ என வழங்கப்படுகிறது. இந்த நியாயத்தை வழங்கும் சக்தி சாமான்ய சக்தியாக இருக்க முடியாது, அது திவ்ய ஸ்வரூபமாகும்.
4 ஆ. கிடைப்பதற்கரிய திவ்யசக்தியே தர்மமாகும்
எந்த திவ்யசக்தியின் ஒவ்வொரு நிர்ணயமும் ‘நியாயம்’ ஆகிறதோ அது தானே திவ்ய ஸ்வரூபமாக விளங்குகிறது. இவ்வாறான, கிடைப்பதற்கரிய திவ்யசக்திக்கு முக்குணங்கள் நிறைந்த இவ்வுலகில் அதி உன்னதமான ‘தர்மம்’ என்ற பதம் கிடைத்துள்ளது. திவ்யசக்தியின் பெயருடன் ‘தர்மம்’ என்ற வார்த்தை ஆபரணமாக சேர்ந்துள்ளதால் அந்தப் பெயர் அதி உன்னத சிறப்பு வாய்ந்ததாக ஆகிறது. இக்காரணத்தால் யமராஜனுக்கு ‘யமதர்மராஜன்’ என்ற பெயர் கிடைத்துள்ளது.
4 இ. யமதர்மன் மற்றும் தர்மஸ்வரூபமான அம்சாவதாரம்
யமராஜனின் அம்சாவதாரமான மூத்த பாண்டவ சகோதரர் யுதிஷ்டிரரும் ‘தர்மராஜன்’ என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். யமராஜனின் இன்னொரு அம்சாவதாரம் ‘விதுரர்’ ஆவார். அவர் நீதிசாஸ்திரத்தில் வல்லுனராக இருந்தவர். அவர் கூறியுள்ள பிரபலமான ‘விதுரநீதி’யே ‘விதுரரின் தர்மநீதி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
5. நரகவேதனை அனுபவிக்கும் பாவி லிங்கதேஹத்தின் மனநிலைக்கு ஏற்ப உறுதிப்படும் ஆளுமை குறைகளான தீய ஸன்ஸ்காரங்கள் மற்றும் மேற்கொண்டு கிடைக்கும் கதி
மன நிலை | உறுதிப்படும் ஆளுமை குறை | மேற்கொண்டு கிடைக்கும் கதி |
---|---|---|
1. தான் செய்த பாவகர்மாவை ஒத்துக் கொள்ளாதது | எதிர்மறைத் தன்மை, துக்கம் மற்றும் நிலைகொள்ளாமை ஆகிய ஸன்ஸ்காரங்கள் | தாவிரம், பிராணி ஆகிய பிறவிகள் கிடைத்தல், மனிதப் பிறவியில் மிகுந்த துக்கம் அனுபவித்தல் |
2. மோலோட்டமாக வருந்துவது | சொன்னவற்றை மட்டுமே செய்தல் | கழுதை, ஆண் எருமை, பெண் எருமை, ஒட்டகம் மற்றும் கழுதையைப் போன்று ஆயுள் முழுவதும் கஷ்டம் அனுபவிக்கும் மனிதப் பிறவி கிடைத்து வாழ்வில் நிறைய கஷ்டங்களையும் துக்கத்தையும் அனுபவித்தல் |
3. பொய்யான மன்னிப்பு கோரி தான் திருந்தியதாக பாசாங்கு செய்தல் | பொய்மை மற்றும் ஜம்பம் | குள்ளநரி, ஓநாய் மற்றும் திருடன், கொள்ளைக்காரன் போன்ற பாவிகளின் குலத்தில் பிறந்து வாழ்வு நிலையில்லாமல் , நம்பிக்கை துரோகம் இழைத்து உட்பிளவு, சண்டைகளால் துன்பம் அனுபவித்தல் |
4. வருந்துவதாக நாடகமாடுதல் | ஏமாற்றுதல், சந்தர்ப்பவாதியாக இருத்தல் | பச்சோந்தி, முதலை மற்றும் தந்திரமான வக்கீல், கொள்ளையடிக்கும் வியாபாரி மற்றும் ஏமாற்றும் ஜமீந்தார் ஆகிய பிறவிகள் கிடைத்து பல்வேறு உடல் நோய்கள் ஏற்பட்டு மனம் நிலைகொள்ளாமல் தவித்து அமைதியில்லாமல் இருத்தல் |
5. மனதில் பாவகர்மாவை சரியென்று கொண்டு இறைவனை வெறுத்தல் | தர்மம் சம்பந்தமாக வெறுப்புணர்வு இருத்தல் | விஷமுள்ள தாவிரம் அல்லது பிராணி ஆதல், எழுத்து மற்றும் வாக்கு மூலமாக தர்மம் சம்பந்தமாக புத்திபேதம் செய்தல், தவறாகப் புரிந்து கொள்ளுதல் |
6. வெளிப்படையாக பாவத்தை சரியென்று கொண்டு தெய்வத்தை அவமானம் செய்தல் | வெளிப்படையாக தர்மத்தை பெருமளவு விரோதித்தல் | கோவில்கள், நம்பிக்கை கேந்திரங்கள் மற்றும் வித்யாபீடங்களை தாக்கி அழித்தல், எண்ணிலடங்கா பக்தர்களுக்கு துன்பம் விளைவித்து இனப்படுகொலை செய்தல், பசுவதை செய்தல், தர்ம நூல்களை எரித்தல் மற்றும் சண்டை சச்சரவால் சொந்த மனிதர்களையே குரூரமாக கொல்லுதல் |
7. பாவகர்மா மற்றும் நரகவேதனை அனுபவித்ததற்கு தெய்வத்தை குற்றம் சாட்டி தெய்வத்திடம் தீவிர விரோத மனப்பான்மையை கொள்ளுதல் | தர்மத்தைப் பற்றிய வெறுப்பு உச்ச நிலைக்கு சென்று தர்மத்தையே வேரறுக்க உறுதி பூணுதல் | உலக அளவில் தர்மத்தை எதிர்த்து பல்வேறு தீய மனிதர்களுக்கு தலைமை வகித்து உடல், மனம், புத்தி, கலாச்சாரம், பணம் மற்றும் சமூகம் ஆகிய நிலைகளில் தாக்குதல் நடத்தி ஆன்மீக நிலையில் தர்மத்தின் இருப்பை ஆட்டம் காண செய்யும் பெரிய தீய சக்தியாக உருமாறுதல் |
6. நரகவேதனையிலிருந்து விடுபட சம்பூர்ண பாவங்களைத் தொலைப்பதற்கான சுத்திகரண செயல்முறை நடத்தல்
6 அ. லிங்கதேஹம் பூரண இருப்புடன் நரக வேதனையை
அனுபவிப்பதால் விரைவில் பாவத்திலிருந்து விடுபடுதல்
நரகத்திற்கு செல்லும் பாவி லிங்கதேஹத்தை அங்குள்ள யமதூதர் அதனின் ஒவ்வொரு பாவத்தின் ஸ்வரூபம் மற்றும் தீய விளைவின் ஒவ்வொரு கணத்தையும் நினைவுறுத்துகிறார். யமதூதர்கள் பாவ கர்மங்களை கணத்திற்கு கணம் நினைவுறுத்துவதால் நரகத்தில் பயங்கர வேதனையை அனுபவிக்கும்போது லிங்கதேஹத்திடம் எப்பொழுதும் பாவ கர்மாக்களின் நினைவு விழிப்புற்ற நிலையில் உள்ளது. அதன் மூலம் பாவங்களைத் தொலைக்க வைக்கும் இந்த செயல்முறையில் லிங்கதேஹத்தின் சூட்சும இருப்புடன் கூட அதன் நினைவாற்றல் ஆகிய அதி சூட்சும இருப்பும் கலந்து கொள்கிறது. அதாவது அந்த லிங்கதேஹம் பூரண நினைவுடன் அந்த நரக வேதனையை அனுபவிக்கிறது. இக்காரணத்தால் குறைந்த காலத்திற்குள் ஒரு பாவம் ஸம்பூர்ணமாக தொலைகிறது. இது போன்று ஒவ்வொரு பாவத்தையும் தொலைத்த பின்னர் அந்த லிங்கதேஹம் பாவங்களிலிருந்து விடுபடுகிறது. கடைசி பாவமும் தொலைந்த பின் லிங்கதேஹம் பூரணமாக பாவங்களிலிருந்து விடுபட்டு தர்மசக்தியின் உதவியால் நரகத்திலிருந்து வெளியே தள்ளப்படுகிறது.
6 ஆ. பாவி லிங்கதேஹத்தின் விரைவான உத்தாரணத்திற்காக
கடினமான காரியத்தை உண்மையுடன் செய்து முடிக்கும் யமதூதர்கள்!
லிங்கதேஹம் ஸம்பூர்ண நினைவுடன் நரக வேதனையை அனுபவித்து முடிந்தவரைக்கும் விரைவில் பூரணமாக பாவங்களிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆர்வம் லிங்கதேஹத்தைக் காட்டிலும் யமதர்மனுக்கு அதிகம் உள்ளது. பாவத்திற்கேற்ற தண்டனையாக கடுமையான வேதனையைத் தருவது மற்றும் பாவ கர்மாவின் நினைவை கணத்திற்குகணம் விழிப்புற்ற நிலையில் வைத்திருப்பது ஆகிய கடினமான காரியங்களை யமதூதர்கள் பாவி லிங்கதேஹத்தின் மேம்பாட்டிற்காக முழுமையாக செய்கின்றனர்.
6 இ. பாவி லிங்கதேஹத்தை விரைவில் பாவத்திலிருந்து
விடுபட வைக்க யமதூதர்கள் உணர்வு ரீதியாக
பச்சாதாபப் படாமல் ஆன்மீக ரீதியாக எதிர்பார்ப்பில்லாத
அன்புடன் சாக்ஷி உணர்வுடன் காரியங்களை செய்கின்றனர்
பாவி லிங்கதேஹத்திடம் யமதூதர்களுக்கு சிறிது உணர்வு ரீதியான பச்சாதாபம் ஏற்படுமானால் அவர்களால் தண்டனையாக கடும் வேதனையைத் தர இயலாது; அத்துடன் பாவகர்மாவை தொடர்ந்து நினைவுறுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் செய்திருப்பர். அவ்வாறு செய்தால் பாவம் தொலையும் வேகம் குறையும். அதன் விளைவாக யமராஜன் நிச்சயித்திருந்த தண்டனையின் காலவரை அதிகமாகும்; பாவி லிங்கதேஹம் அதிக காலம் நரக வேதனையை அனுபவிக்க வேண்டி இருக்கும். இவ்வாறாக லிங்க தேஹத்திற்கு ஒவ்வொரு பாவத்திலிருந்தும் விடுபடுவதற்கு அதிக காலம் பிடிக்கும்; அத்துடன் முழு பாவங்களிலிருந்து விடுபடுவதற்கும் வெகு காலம் ஆகும். இந்த உண்மை யமதூதருக்குத் தெரியும். அதனால் பாவி லிங்கதேஹத்தை விரைவில் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக யமதூதர்கள் அவர்களின் விஷயத்தில் உணர்வு பூர்வமாக கையாளாமல் ஆன்மீக ரீதியாக எதிர்பார்ப்பில்லாத அன்புடன் அவர்களின் காரியத்தை சாக்ஷி உணர்வுடன் செய்கின்றனர்.
– குமாரி மதுரா போஸ்லே (சூட்சுமத்தில் கிடைத்த ஞானம்), ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (11.6.2014 இரவு 8.05)
குறிப்பிட்ட யோனியில் புது தேஹத்திற்கேற்ப (இறப்பிற்கு பின்னர்) கடந்த கால நினைவு இருத்தல் அல்லது மறைதல்
லிங்கதேஹம் நரகத்திலிருந்து விடுபட்டவுடன் யமதேவன் 84 லக்ஷ யோனிகளில் தேர்ந்தெடுத்துள்ள யோனியில் அது பிரவேசிக்கும் வரை இறப்பிற்கு பின்னர் நடந்த எல்லா நிகழ்வுகளும் தெளிவாக நினைவில் உள்ளன. பெரும்பான்மையான லிங்கதேஹங்களுக்கு குறுப்பிட்ட யோனியில் பிரவேசித்து புது தேஹம் கிடைக்கும் வரை இறந்தகாலம் அனைத்தும் நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கின்றன. குறிப்பிட்ட யோனியில் கிடைக்கும் புது தேஹம் சூட்சும தேஹமாக இருந்தால் கடந்தகாலத்தின் நினைவு வெகு காலத்திற்கு இருக்கிறது. குறிப்பிட்ட யோனியில் கிடைக்கும் புது தேஹம் ஸ்தூலமாக இருந்தால் கடந்தகாலத்தின் நினைவு புது தேஹம் எடுத்து பிறந்தவுடன் மறைந்து போகிறது, உதாரணத்திற்கு லிங்கதேஹத்திற்கு பூத யோனி கிடைத்தால் கடந்தகாலத்தின் நினைவு அப்படியே இருக்கும்; ஆனால் ஒரு பூச்சியாக பிறவி எடுத்தால் கடந்தகால நினைவு மறைந்து போகிறது.
அ. குறிப்பிட்ட யோனியில் லிங்க தேஹத்திற்கு ஸ்தூல
தேஹம் கிடைத்த பின்பும் கடந்தகால நினைவு விழிப்புற்று இருத்தல்
சில சமயங்களில் குறிப்பிட்ட யோனியில் லிங்க தேஹத்திற்கு ஸ்தூல தேஹம் கிடைத்திருந்தாலும் அதற்கு கடந்தகால நினைவு அப்படியே உள்ளது. இதற்கு பல நிகழ்வுகள் காரணமாக அமைகின்றன. கடந்தகால நினைவின் காலவரை மற்றும் குணங்கள் ஆகியவற்றிற்கும் மனதின் செயல்முறைக்கும் உறுதியான சம்பந்தம் உள்ளது.
ஆ. மனதின் செயல்பாடுகளை ஆதாரமாகக்
கொண்ட கடந்தகால நினைவு வகைகள் மற்றும் அருள்
மனதின் செயல்பாடுகள் | விழிப்புற்ற நிலையில் இருக்கும் கடந்தகால நினைவின் காலவரை மற்றும் குணங்களுக்கேற்ப வகை | அருள் |
---|---|---|
1. நரகவேதனை அனுபவிக்கும்போது தீவிரமாக வருந்தி மன்னிப்பு கோருதல் | இறப்பிற்கு பின்னுள்ள காலத்தின் நினைவு | – |
2. யமபுரியில் நியாய தர்பாரில் சித்ரகுப்தன் கூறும் தவறுகளை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு வருந்துதல் மற்றும் பச்சாதாபம் அதிகமாதல் | கடந்த பிறவியின் நினைவு | – |
3. இறப்பிற்கு பின் முக்கிய யமபுரிக்கு போகும் முன்னர் பாவம் மற்றும் தவறுகளை உணர்ந்து அதிக அளவு வருந்தி பச்சாதாபம் ஏற்படுதல் | கடந்த 7 பிறவிகளின் நினைவு | – |
4. இறப்பிற்கு முன் வாழும்போதே பாவம் மற்றும் தவறுகளை உணர்ந்து வருந்தி மனப்பூர்வமாக பச்சாதாபம் ஏற்படுதல் | கடந்த 10 பிறவிகளின் நினைவு | – |
5. குறிப்பு 4-ல் எடுக்கப்பட்ட முயற்சிகளோடு கூட தெய்வத்திடம் சரணடைந்து மன்னிப்பு கோருதல் | கடந்த 12 பிறவிகளின் நினைவு மற்றும் மகான்களின் தரிசன பலன் | – |
6. குறிப்பு 5-ல் எடுக்கப்பட்ட முயற்சிகளோடு கூட தன்னிடம் நேர்மறையான மாற்றம் வர வேண்டும் என்பதற்காக ஆர்வத்துடன் முயற்சித்தல் | வெறும் ஸாதனைக்குத் தேவையான கடந்த பிறவிகளிலிருந்து அவசியமான நினைவு | இந்தப் பிறவியில் மகானின் சகவாசம் கிடைத்தல் |
7. தன்னிடம் நேர்மறையான மாற்றம் வர வேண்டும் என்பதற்காக ஆர்வத்துடன் முயற்சித்தல் | வெறும் ஸாதனைக்குத் தேவையான கடந்த பிறவிகளிலிருந்து அவசியமான நினைவு மற்றும் பிரம்மாண்டத்தில் மற்ற லோகங்களுக்கு போய்வரக்கூடிய அசாதாரண நினைவு ஏற்படுதல் | மகானுக்கு சேவை செய்யும் யோகம் கிடைத்தல் மற்றும் காலத்தின் திரைக்கு அப்பாற்பட்டு பார்க்கும் சித்தி ஏற்படுதல் |
8. ” | வெறும் ஸாதனைக்குத் தேவையான கடந்த பிறவிகளிலிருந்து அவசியமான நினைவு மற்றும் பிரம்மாண்டத்தில் உச்ச லோகங்களில் சூட்சுமமாக உலவும் சித்தி நீண்ட காலத்திற்கு கிடைத்தல் மற்றும் திவ்ய நினைவு ஏற்படுதல் | குருவின் விசேஷ அருள் இருப்பதால் குருவின் சகவாசம் மற்றும் ஸத்சேவை கிடைத்தல் |
9. “ | பிரம்மாண்டத்தில் உச்ச லோகங்களில் சூட்சும வாசம் செய்த பரம திவ்ய நினைவு ஏற்படுதல் | குரு மற்றும் உச்ச தெய்வங்களின் ஸம்பூர்ண ஆசீர்வாதம் கூடவே இருப்பதால் குரு காரியம் நடத்தல் மற்றும் தர்மகாரியங்களில் பூரண நேரம் நல்லமுறையில் பங்கேற்றல் |
– குமாரி மதுரா போஸ்லே (சூட்சுமத்தில் கிடைத்த ஞானம்), ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. ( 13.6.2014, மாலை 4.55)