பசு வம்சம் : மனித குலத்தின் ஒரே ஸஞ்ஜீவனி!

தர்மத்தை பின்பற்றாதவர்கள், ஹிந்து விரோதிகள், மத அடிப்படைவாதிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் தனிமனித உரிமை பேசுபவர்கள் ஆகிய எல்லோரும் உத்தரபிரதேசத்திலுள்ள கோ-கதை பிரவசனம் செய்யும் முஹம்மத் ஃபைஸ் கான் என்பவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்வார்களா?

‘பசுக்களின் மகிமை மக்களிடையே சென்று சேர வேண்டும் மற்றும் பசுக்குலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உத்தரபிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் ஃபைஸ் கான் அவர்கள் கோ-கதை பிரவசனப் பணியை மேற்கொண்டுள்ளார். அவர் கோ-கதை சொல்வதற்காக விஜய்பூருக்கு வருகை தந்தபோது அங்கு “தைநிக் ஸம்யுக்த கர்நாடக்’’ என்ற பத்திரிக்கையின் பிரதிநிதியுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அதிலிருந்து ஒரு பகுதியை வாசகர்களுக்காக இங்கு வழங்குகிறோம். ‘

 

1. பசு வம்சம் அழிந்தால் மனிதகுலம் உயிர் வாழ்வதே கடினம்!

‘நான் கோமாதாவிற்காக என் உயிரையும் தருவதற்கு சித்தமாயுள்ளேன். பசு இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. பசு வம்சத்தை அழித்தால் இவ்வுலகில் மனிதர்களால் உயிர் வாழ முடியாது. பசு, மக்களை பிளவு படுத்துவதில்லை; மாறாக பிணைக்கிறது. என்னுடைய கோ-கதை பிரவசனத்தை எதிர்ப்பவர்கள் இஸ்லாமியத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்.

 

2. பசு மாமிசத்தை உண்பது என்பது தொழுநோயை வரவேற்பதாகும்!

‘பசுவின் பால் அமுதம், நெய் மருந்து, ஆனால் மாமிசம் நோயை வரவழைக்கும் பொருளாகும். சிவப்பு மாமிசத்தை உண்பதால் தொழு நோய் ஏற்படுகிறது என்பது விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டுள்ளது. அதனால் பசு மாமிசத்தை உண்ணாதீர்கள். உணவு வழிமுறைகள் வெவ்வேறானவை. உங்களுக்கு விருப்பத்துடன் விஷத்தை உட்கொள்ள வேண்டும் என்றால் யாரால் தடுக்க முடியும்? ஆனால் மதத்தின் பெயரில் பசு மாமிசத்தை உண்பது எங்களின் உரிமை என சொல்லி மற்றவர்களையும் ஏமாற்றாதீர்கள்.

 

3. பசு இனமே உண்மையான செல்வம் என்பதால் அவற்றை பாதுகாப்பது அவசியம்!

பசுவின் பால் பரிபூரண உணவு ஆகும், கோமூத்திரமோ பூமியின் ஸாத்வீகத் தன்மையை அதிகரிக்கிறது. அதனால் பசு இனமே உண்மையான செல்வம் ஆகும். காரணமில்லாமல் யாரையும் எதிர்க்க வேண்டும் என்பதோ, கண்டனம் செய்ய வேண்டும் என்பதோ யாருடைய உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்பதோ உணவு முறையை விரோதிக்க வேண்டும் என்பதோ நோக்கமில்லை. பசுவை காப்பாற்றினால் நீங்களும் காப்பாற்றப் படுவீர் என்ற உண்மையை உலகுக்கு எடுத்துரைப்பதே நோக்கம்.

 

4. தேச மக்கட்தொகையில் இரண்டாவது இடத்தை வகிக்கும் முஸ்லிம்கள் கல்வித்துறையிலும் முன்னிலையில் உள்ளனரா?

பரமாத்மாவிடமிருந்து முதலில் வந்த செய்தி ‘இக்ரா’. ‘கற்றல்’ என்பதே இதன் அர்த்தம். கல்வியே மனிதனை சரியான வழியில் இட்டு செல்லும். இருந்தாலும் சிலர் கல்வி கற்காமல் இருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது. பாரதத்தில் மிகக் குறைந்த மக்கட்தொகை கொண்டவர்கள் ஜைனர்கள்; ஆனால் அவர்களில் 99 சதவிகிதத்தினர் உயர்கல்வி கற்றவர்கள். தேசத்தின் மக்கட்தொகையில் இரண்டாவது இடத்தை முஸ்லிம்கள் வகிக்கிறார்கள். ஆனால் கல்வியில் இறுதி இடத்தில் உள்ளனர். ஏன் இவ்வாறு? இது எனக்குப் புரிவதில்லை. உணவு விஷயத்தில் உரிமையை நிலைநாட்டுபவர்கள் ஏன் கல்வி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை?’

தகவல் : ‘தைநிக் ஸம்யுக்த கர்நாடக்’

Leave a Comment