ராம ராஜ்யத்தை நனவாக்குவது உங்களின் கைகளில்!
குடிமக்களின் வாழ்வு இன்பமும் அமைதியும் நிறைந்ததாய், மேன்மையுற்றதாய் செய்யும், குற்றவாளிகள், ஊழல் பேர்வழிகள் ஆகியோருக்கு இடம் அளிக்காததாய், இயற்கை அழிவுகளை தூண்டி விடாததாய் … உள்ள ஒரே ராஜ்யம் ராமராஜ்யம் !
குடிமக்களின் வாழ்வு இன்பமும் அமைதியும் நிறைந்ததாய், மேன்மையுற்றதாய் செய்யும், குற்றவாளிகள், ஊழல் பேர்வழிகள் ஆகியோருக்கு இடம் அளிக்காததாய், இயற்கை அழிவுகளை தூண்டி விடாததாய் … உள்ள ஒரே ராஜ்யம் ராமராஜ்யம் !
காலங்களில் நான் வஸந்தம் என்று பகவான் கிருஷ்ணன் கூறியுள்ளபடி, இளந்தளிரும் பூக்களும் பூத்துக் குலுங்கும் ரம்மியமான காலம் இது.
இன்று சூர்யோதயத்திலிருந்து சூர்யாஸ்தமனம் வரை அதிக சைதன்யம் நிரம்பியுள்ளதால் இக்காலம் ஸாதனை செய்வதற்கு ஸாதகமாக உள்ளது.
ஆரம்பத்தில் பிரார்த்தனை பாவபூர்வமாக இல்லாமல் வெறும் வார்த்தைகளாக சொல்லப்படுகிறது.
பெரும்பாலமான மக்கள் தங்கள் விருப்பம் பூர்த்தியாவதற்கும், தங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்குமே பிரார்த்தனை செய்கிறார்கள்; ஆனால் தங்கள் கோரிக்கை நிறைவேறியதும் கடவுளுக்கு நன்றி செலுத்த மறந்து விடுகிறார்கள்.
அதிகாலையில் வீட்டு வாசலை சாவி கொண்டு திறக்கும் முன்பும், மீண்டும் இரவில் பூட்டும்போதும் பிரார்த்தனையுடன் செய்வதில் ஒரு உன்னதமான தத்துவம் உள்ளது. நமது அன்றாட அவசர வாழ்க்கையின் நெரிசலில் நாம் நமது நிம்மதியை இழந்து விடுகிறோம். இழந்த மனநிம்மதியை நாம் மறுபடி பிரார்த்தனை மூலம் பெறலாம்.
தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொண்டு, விரும்பிய ஒரு செயலை செய்வோமானால், அந்த தெய்வத்தின் ஆசி கிடைக்கிறது. மேலும் நமது ஆத்ம பலமும் தன்னம்பிக்கையும் வளர்கிறது. அதன் பயனாக அச்செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்படுகிறது.
நாமஜபத்தைப் போலவே பிரார்த்தனையையும் தெய்வத்திருவுரு முன்னேயோ, வீட்டிலோ, வெளி வராண்டாவிலோ, அலுவலகத்திலோ, வயலிலோ, பள்ளியிலோ, ஹோட்டலிலோ, மருத்துவமனையிலோ, பிரயாணத்தின்போதோ, உட்கார்ந்திருக்கும்போதோ, படுக்கையில் படுத்துக் கொண்டோ எந்த நிலையிலும் செய்யலாம்.
பிரார்த்தனைகளின் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவரவர்கள் தங்கள் ஆன்மீக உணர்விற்கேற்ற வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்யலாம். அப்போதைய மனோநிலைக்-கேற்ப வார்த்தைகளை மாற்றியும் பிரார்த்தனை செய்யலாம்.
நிஷ்காம பிரார்த்தனை என்பது உலக ரீதியான வாழ்க்கையில் எந்தப் பலனையும் எதிர்பார்க்காதது. நிஷ்காம பிரார்த்தனையில் கடவுளிடம் சரணாகதி செய்வது ஒன்றே முக்கிய குறிக்கோளாக இருக்கும்.