ஸ்ரீ கணேச நாமஜபம் !
ஸ்ரீ கணபதியின் தாரக மற்றும் மாரக நாமஜபத்தைப் பற்றிய வழிகாட்டுதல் அடங்கிய கட்டுரை!
ஸ்ரீ கணபதியின் தாரக மற்றும் மாரக நாமஜபத்தைப் பற்றிய வழிகாட்டுதல் அடங்கிய கட்டுரை!
அருகம்புல் மற்றும் புல்லின் இலைகளை எப்பொழுதும் ஒற்றைப்படையில் (குறைந்தபட்சம் 3, 5, 7, 21) அர்ப்பணிக்கவும்.
அழிவைத் தரக்கூடிய, தமோகுணம் நிறைந்த யம அதிர்வலைகள், பூமியில் ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை நூற்று இருபது நாட்கள் அதிக அளவில் வருகின்றன.
புனர்பூஜை செய்த பிறகு மூர்த்தியை நீர்நிலையில் விஸர்ஜனம் செய்கின்றனர். விஸர்ஜனத்திற்காக செல்லும்போது, கணபதி மூர்த்தியோடு தயிர், அவல், தேங்காய் மற்றும் மோதகத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். நீர்நிலைக்கருகில் மூர்த்திக்கு ஆரத்தி எடுத்து, மற்ற பொருட்களுடன் சேர்ந்து மூர்த்தியை விஸர்ஜனம் செய்ய வேண்டும்.
தூ: + அவம் என்பதே தூர்வா ஆயிற்று. தூ: என்றால் தூரத்தில் இருப்பது; அவம் என்றால் அருகில் வரவழைப்பது; எனவே தூர்வா என்றால் தொலைவிலுள்ள கணபதியின் பவித்ர துகள்களை அருகில் வரவழைப்பதாகும்.
எந்த ஒரு விழாவையும் துவங்கும்முன், அது கிராம திருவிழாவாவோ, திருமண விழாவாவோ, புதுமனை புகுவிழாவாவோ, முதலில் கணேச பூஜை செய்யப்படுகிறது. ஏனென்றால் கணபதி என்பவர் தான் விக்னஹர்தா.
ஹிந்துக்களிடம் தர்மப்பற்று, தேசப்பற்று ஏற்பட வேண்டும், ஹிந்துக்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற உன்னத லக்ஷியத்தோடு பால கங்காதர திலகர் இந்த சமூக கணேஷோத்ஸவங்களைத் துவங்கி வைத்தார். ஆனால் இன்று கொண்டாடப்படும் சமூக உற்சவங்களில் நடக்கும் அநாசாரங்கள் மற்றும் தவறுகள் இந்த மூல லக்ஷியத்தை மறைத்து விட்டன.
எந்த நாளன்று கணேசனின் அதிர்வலைகள் முதன் முதலாக பூமியில் வந்தனவோ, என்று கணேசனின் பிறப்பு ஏற்பட்டதோ அந்த நாளையே மாசி சுத்த சதுர்த்தி என்கிறோம்.
கணேச சதுர்த்தி சமயத்தில் பூமியில் கணேசனின் அதிர்வலைகள் அதிக அளவில் வருகின்றன. இந்த அதிர்வலைகளை பூஜை அறையில் இருக்கும் கணேச வடிவத்தில் ஆவாஹனம் செய்தால் அது அதிக சக்தி உள்ளதாக ஆகிவிடுகிறது.
அ. கணேசமூர்த்தியை வீட்டிற்கு கொண்டு வர வீட்டின் தலைவர் மற்றவர்களுடன் செல்ல வேண்டும்.