பகவான் ஸ்ரீ தத்தாத்ரேயர்
ஸ்ரீ குருதேவ தத்த நாமஜப-படிவம்
1. ஸ்ரீ தத்த குருவின் நாமஜபத்தை எவ்வாறு செய்ய வேண்டும்?
நாமஜபத்தின் மூலம் தெய்வ தத்துவத்தின் அதிகபட்ச பலனைப் பெற அந்தந்த நாமஜபத்தின் உச்சாரணம் ஆன்மீக சாஸ்திரப்படி சரியானபடி இருத்தல் அவசியமாகிறது. அதற்கு ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தை எவ்வாறு செய்வது என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தை செய்யும்போது ஸ்ரீ தத்த குருவின் ரூபத்தை மனக்கண் முன் கொண்டு வர வேண்டும் மற்றும் நம்முடைய மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து நம்மை ரக்ஷிக்க அவர் ஓடி வருகிறார் என்ற ஆன்மீக உணர்வைக் கொண்டு நாமஜபத்திலுள்ள ஒவ்வொரு அக்ஷரத்தையும் ஆன்மீக உணர்வு பூர்வமாக உச்சரிக்கவும்.
இதற்கு மாறாக அழிக்கும் தத்துவ நாமஜபத்தை செய்யும்போது ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்பதிலுள்ள ஒவ்வொரு அக்ஷரத்தையும் அழிக்கும் ஸ்வரத்தில் உச்சரிக்கவும். அப்பொழுது தெய்வத்தின் நாமத்தில், அதாவது ‘தத்த’ என்ற வார்த்தையின் ஆரம்பத்தில் வரும் ‘த’ என்ற அக்ஷரத்தில் அதிக அழுத்தம் அளிக்கவும்.
ஸாதகர்கள், ‘தினசரி ஸனாதன் பிரபாத்’தில் வெளியிட்டுள்ளபடி ‘ஓம் ஓம் ஸ்ரீ குருதேவ தத்த ஓம் ஓம்’ நாமஜபத்தை செய்யவும்.
– குமாரி தேஜல் பாத்ரிகர், ஸங்கீத விஷாரத், ஸங்கீதத் துறை ஒருங்கிணைப்பாளர், மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம், ராம்நாதி, கோவா.
தத்த நாமஜபத்தைக் கேட்கவும்
Audio Player“ஸ்ரீ குருதேவ தத்த”
Audio Player“ஓம் ஓம் ஸ்ரீ குருதேவ தத்த ஓம்”
2. தத்தரின் நாமஜபத்தை செய்வதால் அதிருப்தி அடைந்த மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பு கிடைத்தல்
அ. பாதுகாப்பு கவசம் நிர்மாணமாதல்
தத்த நாமஜபத்தால் உண்டாகும் சக்தியால் நாமஜபத்தை செய்பவரை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது.
ஆ. அதிருப்தி அடைந்த மூதாதையர்களுக்கு கதி கிடைத்தல்
பெரும்பாலோர் ஸாதனை செய்யாததால் அவர்கள் மாயையில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். மாயையில் மூழ்கி இருப்பதால் இறந்த பின்னர் அவர்களின் லிங்கதேஹம் அதிருப்தியுடன் இருக்கிறது. அவ்வாறான லிங்கதேஹங்கள் ம்ருத்யு லோகத்தில் மாட்டிக் கொள்கின்றன. தத்தரின் நாமஜபத்தால் ம்ருத்யு லோகத்தில் மாட்டிக் கொண்ட மூதாதையர்களுக்கு கதி கிடைக்கிறது. (பூலோகம் மற்றும் புவர்லோகத்திற்கு இடையே ம்ருத்யு லோகம் உள்ளது.) அதனால் அவர்கள் தங்களின் கர்ம வினைப்படி மேற்கொண்டு லோகங்களுக்கு பயணிக்க முடிகிறது, அதோடு அவர்களால் ஏற்படும் கஷ்டங்களும் குறைகின்றன. இது சம்பந்தமாக மேலும் விவரங்களுக்கு ஸநாதனின் வெளியீடான ‘தத்த’ நூலை வாங்கிப் படிக்கவும்.
இ. சிவனின் சக்தி கிடைத்தல்
தத்த நாமஜபத்தால் ஒரு ஜீவனுக்கு சிவனின் சக்தியும் கிடைக்கிறது.
3. தத்தரின் நாமஜபம் மற்றும் அதிருப்தி அடைந்த
மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்களுக்கான நிவாரணம்
- தற்போது எவ்வித கஷ்டங்கள் இல்லை என்றாலும் வருங்காலத்தில் கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்க மற்றும் யாருக்கு குறைந்த அளவு கஷ்டங்கள் உள்ளனவோ அவர்கள் யாவரும் குறைந்தபட்சம் 1 – 3 மணி நேரம் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். விதியால் ஏற்படும் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தி கிடைக்கவும், ஆன்மீக முன்னேற்றம் ஏற்படவும் சர்வ சாதாரண மனிதர்களும் ஆரம்ப நிலையில் உள்ள ஸாதகர்களும் அவரவரின் குலதேவதையின் நாமஜபத்தை அதிகபட்ச அளவு செய்ய வேண்டும்.
- மத்யம கஷ்டங்கள் இருக்குமானால் குலதேவதையின் நாமஜபத்துடன் கூட ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தையும் குறைந்தபட்சம் 2 – 4 மணி நேரம் வரை செய்ய வேண்டும். அதோடு வியாழக்கிழமை தத்தரின் கோவிலுக்கு சென்று ஏழு பிரதக்ஷிணங்கள் செய்ய வேண்டும் மற்றும் உட்கார்ந்து ஓரிரு மாலைகள் வருடம் முழுவதும் ஜபம் செய்ய வேண்டும். அதற்குப் பின் மூன்று மாலைகள் ஜபம் தொடர்ந்து செய்து வரவும்.
- தீவிர கஷ்டங்கள் இருந்தால் குறைந்தபட்சம் 4 – 6 மணி நேரம் வரை ஜபம் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு ஜோதிர்லிங்க க்ஷேத்திரத்திற்கு சென்று நாராயணபலி, நாகபலி, த்ரிபிண்டி ச்ரார்த்தம், காலசர்ப்ப சாந்தி போன்ற விதிகளை செய்ய வேண்டும். அதோடு ஏதாவது ஒரு தத்த க்ஷேத்திரத்தில் தங்கி ஸாதனை செய்து, மகான்களுக்கு சேவை செய்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.
- பித்ருபக்ஷத்தில் தத்த நாமஜபம் செய்வதால் பித்ருக்களுக்கு விரைவில் கதி கிடைக்கிறது. அதனால் இக்காலத்தில் தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரத்திற்கு (72 மாலைகள்) ஜபம் செய்ய வேண்டும்.
தத்த நாமஜபத்துடன் கூட விதியால் ஏற்படும் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தி கிடைக்கவும், ஆன்மீக முன்னேற்றம் ஏற்படவும் சர்வ சாதாரண மனிதர்களும் ஆரம்ப நிலையில் உள்ள ஸாதகர்களும் அவரவரின் குலதேவதையின் நாமஜபத்தை அதிகபட்ச அளவு செய்ய வேண்டும்.
தகவல் : ஸநாதனின் கையேடு ‘தத்த’